இந்த நிதிநிலை அறிக்கைக் கூட்டத் தொடரின் போது 15வது நிதி ஆணையத்தின் (Finance Commission - FC) இடைக்கால அறிக்கையானது நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப் பட்டுள்ளது.
15வது நிதி ஆணையத்தின் தலைவர் என்.கே.சிங் ஆவார்.
இந்திய அரசியலமைப்பின் 280வது சரத்தானது நிதி ஆணையம் என்ற பகுதியளவு நீதித்துறை சார்ந்த ஆணையத்தை அமைக்க வழிவகை செய்கின்றது.
இது ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்தியக் குடியரசுத் தலைவரால் அமைக்கப் படுகின்றது.
15வது FC ஆனது 2020-2026 (6 ஆண்டுகள்) ஆகிய ஆண்டுகளுக்கான பரிந்துரைகளை வழங்குகின்றது.
முக்கியப் பரிந்துரைகள்
மக்கள்தொகை செயல்திறன் ஆனது பட்டியலில் சேர்க்கப்பட்ட ஒரு புதிய முக்கியமான அளவுருவாகும்.
நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள், குறிப்பாக ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட நகரங்களில் உள்ள நகராட்சிகள், வரிப் பகிர்வில் பெரும் பங்கைப் பெற உள்ளன.
மாநிலங்களுக்கான வரிப் பகிர்வு
மத்திய அரசின் வரிகளில் மாநிலங்களுக்கான பங்கானது 42%லிருந்து 41% ஆகக் குறைக்கப் பரிந்துரைக்கப் படுகின்றது.
மாநிலங்களிடையே, தமிழ்நாட்டைத் தவிர, மற்ற நான்கு தென் மாநிலங்களும் 2020-21 ஆம் ஆண்டிற்கான பரிந்துரைக்கப்பட்ட வரி சதவிகிதத்தில் குறைவான பங்கைப் பெற இருக்கின்றன.
பாதுகாப்புச் செலவினங்களுக்காக காலாவதியாகாத நிதியை (அந்த நிதியாண்டிலேயேச் செலவழிக்கப் படாத நிதி) ஏற்படுத்த ஒரு நிபுணர் குழுவை அமைக்க FC ஆனது முயற்சி செய்து வருகின்றது.