குடியரசுத் தலைவர் தேர்தல் ஆனது, ஜூலை 18 ஆம் தேதி நடைபெறும் என்று இந்தியத் தேர்தல் ஆணையத்தின் தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் அறிவித்தார்.
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் ஜூலை 24 ஆம் தேதியுடன் முடிவடைகிறது.
ஜம்மு மற்றும் காஷ்மீர் ஒன்றியப் பிரதேசமாக மாறிய பிறகு நடக்கும் முதல் தேர்தல் இதுவாகும்.
இருப்பினும், ஜம்மு மற்றும் காஷ்மீரின் சட்டமன்ற உறுப்பினர்கள் இந்தத் தேர்தல் குழுவின் ஒரு பகுதியாக பங்கேற்க இயலாது.
2022 ஆம் ஆண்டு தேர்தலுக்கான தேர்தல் குழுவில் 4,809 உறுப்பினர்கள் அடங்குவர் - இதில் 233 மாநிலங்களவை உறுப்பினர்கள், 543 மக்களவை உறுப்பினர்கள் (776 நாடாளுமன்ற உறுப்பினர்கள்) மற்றும் 4,033 மாநிலச் சட்டசபைகளின் உறுப்பினர்கள் மற்றும் டெல்லி மற்றும் புதுச்சேரி ஒன்றியப் பிரதேசங்களின் சட்டசபைகளின் சட்டமன்ற உறுப்பினர்கள் அடங்குவர்.
2022 ஆம் ஆண்டிற்கான மொத்த வாக்குகளின் மதிப்பு 10,86,431 ஆக இருக்கும் (1971 ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு 5,43,200 அல்லது தலா 700 வாக்குகள் மற்றும் சட்டசபை உறுப்பினர்களுக்கு 5,43,231 வாக்குகள் ஆகும்).
2017 ஆம் ஆண்டில் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கையானது 4,896 ஆக இருந்தது.
2017 ஆம் ஆண்டில், 1971 ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில், ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினர்களும் 709 வாக்குகளையும், சட்டசபை உறுப்பினர்கள் மொத்தம் 5,49,495 வாக்குகளையும் பெற்றிருந்தனர்.
இந்தத் தேர்தலுக்கான தேர்தல் அதிகாரியாக மாநிலங்களவைப் பொதுச்செயலாளர் அறிவிக்கப்பட்டுள்ளார்.
வழக்கமாக தேர்தல் ஆணையம் வழங்கிய பேனாவைப் பயன்படுத்தி வாக்காளர்கள் வாக்களிப்பது வழக்கமாகும்.