TNPSC Thervupettagam

16 புதிய உள்நாட்டு விலங்கினங்கள்

September 1 , 2026 12 days 111 0
  • இந்திய வேளாண் ஆராய்ச்சி சபையானது (ICAR) 16 புதிய உள்நாட்டு கால்நடை மற்றும் நாய் இனங்களை அதிகாரப்பூர்வமாக பதிவு செய்துள்ளது.
  • இனங்கள் பதிவு செய்யும் குழுவின் (BRC) 14வது கூட்டத்தில் இந்தப் பதிவு அங்கீகரிக்கப் பட்டது, இதன் மூலம் இந்தியாவின் மொத்த பதிவு செய்யப்பட்ட விலங்கினங்களின் எண்ணிக்கை 262 ஆக உயர்ந்துள்ளது.
  • இந்த 16 இனங்கள் 9 விலங்கு வகைகளைச் சேர்ந்தவை மற்றும் இவை 13 மாநிலங்கள் மற்றும் 1 ஒன்றியப் பிரதேசத்தில் (ஜம்மு & காஷ்மீர்) காணப்படுகின்றன.
  • புதிய இனங்களில் கொப்பல், மகாக்கௌசலி, பெரியார் மற்றும் உமர்தா மாடுகள்; கோமஞ்சலி எருமை; பட்டிசி மற்றும் தோத்தாபுரி ஆடுகள்; மற்றும் அசோமி, கௌ தேபர், மாட்க்யால் மற்றும் சீமாஞ்சலி செம்மறி ஆடுகள் ஆகியவை அடங்கும்.
  • இவற்றில் பிராஜ் கழுதை, காஷ்மீரிக் குதிரை, நாகல் பன்றி, சிக்கிம் காட்டெருமை மற்றும் தமிழ்நாட்டின் கோம்பை நாய் ஆகியவையும் அடங்கும்.
  • ஹரியானாவின் கர்னாலில் அமைந்துள்ள ICAR-NBAGR (தேசிய விலங்கு மரபணு வளப் பணியகம்), இந்தியாவில் கால்நடை மற்றும் கோழி இனங்களைப் பதிவு செய்வதற்கான முதன்மை நிறுவனமாகும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்