16 வயதுக்குட்பட்டோர் சமூக ஊடகத்தைப் பயன்படுத்தத் தடை
December 19 , 2025 5 days 50 0
16 வயதுக்குட்பட்ட பதின்ம வயதினர் சமூக ஊடகத்தினைப் பயன்படுத்த தடை செய்த உலகின் முதல் நாடாக ஆஸ்திரேலியா மாறியுள்ளது.
இன்ஸ்டாகிராம், பேஸ்புக், டிக்டாக், யூடியூப், எக்ஸ், ஸ்னாப்சாட், ரெடிட் மற்றும் ட்விட்ச் போன்ற தளங்கள் 16 வயதுக்குட்பட்ட பயனர்களை முடக்க வேண்டும் என்று சட்டம் கோருகிறது.
சட்ட மீறல்களுக்காக பெற்றோர்கள் மற்றும் குழந்தைகள் மீது அபராதங்கள் விதிக்கப் பட மாட்டாது.
தடையை மீறும் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு 32 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வரை அபராதம் விதிக்கப்படலாம்.
தீங்கு விளைவிக்கும் இயங்கலை உள்ளடக்கத்திலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்க இந்தத் தடை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.