16 புதிய உலகளாவியப் புவிசார் பூங்காக்கள் – யுனெஸ்கோ
April 24 , 2025 211 days 248 0
யுனெஸ்கோ அமைப்பானது, ஏப்ரல் 17 ஆம் தேதியன்று 11 நாடுகளில் உள்ள 16 புதிய தளங்களை இந்த ஆண்டு அதன் 10வது ஆண்டு நிறைவை நன்கு குறிக்கின்ற அதன் உலகளாவிய புவிசார் பூங்காக்கள் வலையமைப்பில் சேர்த்துள்ளது.
இந்த வலையமைப்பில் புதிதாக இடம் பெற்றுள்ள புவிசார் பூங்காக்கள் சீனா, வட கொரியா, ஈக்வடார், இந்தோனேசியா, இத்தாலி, நார்வே, தென் கொரியா, சவுதி அரேபியா, ஸ்பெயின், ஐக்கியப் பேரரசு மற்றும் வியட்நாம் ஆகிய சில நாடுகளில் அமைந்துள்ளன.
வட கொரியாவின் தளமானது இந்த வலையமைப்பில் சேர்க்கப்பட்டதன் மூலம், அதன் வரலாற்றில் முதல் முறையாக இத்தகைய பதிவினைப் பெற்றுள்ளது.
சவுதி அரேபியா புதிதாக நியமிக்கப்பட்ட இரண்டு புவிசார் பூங்காக்களுடன் இந்தப் பட்டியலில் முதல் முறையாக அறிமுகமாகியுள்ளது.
புதிய உள்ளீடுகளுடன், இந்த வலையமைப்பானது தற்போது சுமார் 50 நாடுகளில் 229 தளங்களைக் கொண்டுள்ளது.
யுனெஸ்கோ அமைப்பின் உலகளாவியப் புவிசார் பூங்காக்கள் பட்டியலில் இதுவரை எந்த இந்தியத் தளமும் இடம் பெறவில்லை.