இந்திய வேளாண் ஆராய்ச்சி சபையானது (ICAR) 16 புதிய உள்நாட்டு கால்நடை மற்றும் நாய் இனங்களை அதிகாரப்பூர்வமாக பதிவு செய்துள்ளது.
இனங்கள் பதிவு செய்யும் குழுவின் (BRC) 14வது கூட்டத்தில் இந்தப் பதிவு அங்கீகரிக்கப் பட்டது, இதன் மூலம் இந்தியாவின் மொத்த பதிவு செய்யப்பட்ட விலங்கினங்களின் எண்ணிக்கை 262 ஆக உயர்ந்துள்ளது.
இந்த 16 இனங்கள் 9 விலங்கு வகைகளைச் சேர்ந்தவை மற்றும் இவை 13 மாநிலங்கள் மற்றும் 1 ஒன்றியப் பிரதேசத்தில் (ஜம்மு & காஷ்மீர்) காணப்படுகின்றன.
புதிய இனங்களில் கொப்பல், மகாக்கௌசலி, பெரியார் மற்றும் உமர்தா மாடுகள்; கோமஞ்சலி எருமை; பட்டிசி மற்றும் தோத்தாபுரி ஆடுகள்; மற்றும் அசோமி, கௌ தேபர், மாட்க்யால் மற்றும் சீமாஞ்சலி செம்மறி ஆடுகள் ஆகியவை அடங்கும்.
இவற்றில் பிராஜ் கழுதை, காஷ்மீரிக் குதிரை, நாகல் பன்றி, சிக்கிம் காட்டெருமை மற்றும் தமிழ்நாட்டின் கோம்பை நாய் ஆகியவையும் அடங்கும்.
ஹரியானாவின் கர்னாலில் அமைந்துள்ள ICAR-NBAGR (தேசிய விலங்கு மரபணு வளப் பணியகம்), இந்தியாவில் கால்நடை மற்றும் கோழி இனங்களைப் பதிவு செய்வதற்கான முதன்மை நிறுவனமாகும்.