16-வது தமிழ்நாடு சட்டப்பேரவையின் ஐந்தாண்டு பதவிக்காலம் 2026 ஆம் ஆண்டு மே 10-ஆம் தேதியுடன் முடிவடைகிறது.
தமிழ்நாட்டில் நடைபெற்ற மாநிலத் தேர்தல்களைத் தொடர்ந்து, இந்தச் சட்டப்பேரவை 2021 ஆம் ஆண்டு மே 11 அன்று தனது பணிக்காலத்தைத் தொடங்கியது.
முந்தைய சட்டப்பேரவைக் காலங்களை விட, இந்தச் சட்டப்பேரவையில் அமர்வுகள் ஒப்பீட்டளவில் குறைவாகவே பதிவாகியுள்ளன.
இது முழுமையான டிஜிட்டல் மற்றும் காகிதமில்லா முறையில் வரவு-செலவுத் திட்டத்தைத் தாக்கல் செய்ததன் மூலம் ஒரு முக்கிய நிர்வாகச் சீர்திருத்தத்தை அறிமுகப் படுத்தியது.
2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 13, அன்று 2021-22 ஆம் ஆண்டிற்கான திருத்தப்பட்ட வரவு-செலவுத் திட்டத்தை முன்னாள் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் காகிதமில்லா வடிவில் தாக்கல் செய்தார்.
வேளாண் துறைக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், ஆண்டுதோறும் தனியாக 'வேளாண் நிதிநிலை அறிக்கை' அறிமுகப்படுத்தப்பட்டது ஒரு குறிப்பிடத்தக்க முயற்சியாகும்.