16-வது பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் கூட்டம்
June 28 , 2026 88 days 210 0
2026 ஆம் ஆண்டிற்கான பிரிக்ஸ் (BRICS) அமைப்பின் தலைவர் என்ற முறையில், 16-வது பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் (NSA) கூட்டத்தை புதுடெல்லியில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் (NSA) அஜித் தோவல் தலைமையில் இந்தியா தொகுத்து வழங்கியது.
இந்தக் கூட்டமானது, இணையவழிப் பாதுகாப்பு, பயங்கரவாதம், செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் தொழில்நுட்ப நிர்வாகம் உள்ளிட்ட "இன்றைய உலகம் எதிர்கொள்ளும் மரபுசாரா பாதுகாப்பு சவால்கள்" என்பதன் மீது கவனம் செலுத்தியது.
இந்தியாவின் 2026 ஆம் ஆண்டு பிரிக்ஸ் தலைமையகத்தின் கருத்துருவானது Building for Resilience, Innovation, Cooperation and Sustainability என்பதாகும்.
பிரிக்ஸ் அமைப்பின் தலைமைப் பதவியானது உறுப்பினர் நாடுகளிடையே ஆண்டு தோறும் சுழற்சி முறையில் வருகிறது. 2012, 2016 மற்றும் 2021 ஆகிய ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா நான்காவது முறையாக இத்தலைமைப் பதவியை ஏற்றுள்ளது.
தேசிய பாதுகாப்பு ஆலோசகர்களின் (NSA) கூட்டமானது, 2026-ஆம் ஆண்டின் பிற் பகுதியில் இந்தியாவில் நடைபெறவுள்ள பிரிக்ஸ் தலைவர்கள் உச்சி மாநாட்டிற்கான ஒரு முக்கிய ஆயத்தக் கூட்டமாகும்.