இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) ஆனது, இந்தியக் காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (IRDAI) மூலம் ஒழுங்கு படுத்தப்பட்ட நிறுவனங்களுக்கு சேவை மற்றும் பரிவர்த்தனை அழைப்புகளுக்கு 1600-தொடர் தொலைபேசி எண்களைப் பயன்படுத்த உத்தரவிட்டுள்ளது.
1600-தொடர் எண்களை ஏற்றுக் கொள்வதற்கான காலக்கெடு 2026 ஆம் ஆண்டு பிப்ரவரி 15 ஆம் தேதி ஆகும்.
வங்கி, நிதிச் சேவைகள் மற்றும் காப்பீட்டு (BFSI) துறையில் உள்ள நிறுவனங்களால் பயன்படுத்த 1600-தொடர் தொலைபேசி எண்களை தொலைத்தொடர்புத் துறை (DoT) ஒதுக்கியுள்ளது.
1600-தொடர் ஆனது, நுகர்வோர் உண்மையான/முறையான அழைப்புகளை அடையாளம் காண உதவுகிறது என்பதோடுமோசடி மற்றும் தேவையற்ற/ஸ்பேம் அபாயத்தைக் குறைக்கிறது.
இந்த ஆணையானது, RBI, SEBI மற்றும் ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (PFRDA) ஆகியவற்றால் ஒழுங்குபடுத்தப்பட்ட நிறுவனங்களுக்கு முன்னர் வழங்கப்பட்ட இதே போன்ற விதிகளைப் பின்பற்றுகிறது.