TNPSC Thervupettagam

16வது குடியரசுத் தலைவர் தேர்தல்

June 12 , 2022 1151 days 630 0
  • குடியரசுத் தலைவர் தேர்தல் ஆனது, ஜூலை 18 ஆம் தேதி நடைபெறும் என்று இந்தியத் தேர்தல் ஆணையத்தின் தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் அறிவித்தார்.
  • குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் ஜூலை 24 ஆம் தேதியுடன் முடிவடைகிறது.
  • ஜம்மு மற்றும் காஷ்மீர் ஒன்றியப் பிரதேசமாக மாறிய பிறகு நடக்கும் முதல் தேர்தல் இதுவாகும்.
  • இருப்பினும், ஜம்மு மற்றும் காஷ்மீரின் சட்டமன்ற உறுப்பினர்கள் இந்தத் தேர்தல் குழுவின் ஒரு பகுதியாக பங்கேற்க இயலாது.
  • 2022 ஆம் ஆண்டு தேர்தலுக்கான தேர்தல் குழுவில் 4,809 உறுப்பினர்கள் அடங்குவர் - இதில் 233 மாநிலங்களவை உறுப்பினர்கள், 543 மக்களவை உறுப்பினர்கள் (776 நாடாளுமன்ற உறுப்பினர்கள்) மற்றும் 4,033 மாநிலச் சட்டசபைகளின் உறுப்பினர்கள் மற்றும் டெல்லி மற்றும் புதுச்சேரி ஒன்றியப் பிரதேசங்களின் சட்டசபைகளின் சட்டமன்ற உறுப்பினர்கள் அடங்குவர்.
  • 2022 ஆம் ஆண்டிற்கான மொத்த வாக்குகளின் மதிப்பு 10,86,431 ஆக இருக்கும் (1971 ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு 5,43,200 அல்லது தலா 700 வாக்குகள் மற்றும் சட்டசபை உறுப்பினர்களுக்கு 5,43,231 வாக்குகள் ஆகும்).
  • 2017 ஆம் ஆண்டில் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கையானது  4,896 ஆக இருந்தது.
  • 2017 ஆம் ஆண்டில், 1971 ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில், ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினர்களும் 709 வாக்குகளையும், சட்டசபை உறுப்பினர்கள் மொத்தம் 5,49,495 வாக்குகளையும் பெற்றிருந்தனர்.
  • இந்தத் தேர்தலுக்கான தேர்தல் அதிகாரியாக மாநிலங்களவைப் பொதுச்செயலாளர் அறிவிக்கப்பட்டுள்ளார்.
  • வழக்கமாக தேர்தல் ஆணையம் வழங்கிய பேனாவைப் பயன்படுத்தி வாக்காளர்கள் வாக்களிப்பது வழக்கமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்