16வது குறு, நடுத்தர நிறுவனங்கள் மாநாடு, புது தில்லி
September 27 , 2019 2160 days 745 0
மத்திய சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் துறை (Micro, Small and Medium Enterprises - MSME) அமைச்சர் நிதின் கட்காரி 2019 ஆம் ஆண்டின் 16வது குறு, நடுத்தர நிறுவனங்கள் மாநாட்டைப் புது தில்லியில் தொடங்கி வைத்தார்.
இந்த மாநாடானது ஒவ்வொரு ஆண்டும் மத்திய MSME அமைச்சகம் மற்றும் இந்தியத் தொழிற் துறைக் கூட்டமைப்பு ஆகியவற்றினால் ஒருங்கிணைக்கப் படுகின்றது.
2019 ஆம் ஆண்டின் இந்த மாநாட்டின் கருத்துரு, “இந்திய MSMEகளை உலகளவில் போட்டிமிக்கதாக அமைத்தல்” என்பதாகும்.
MSME அமைச்சகமானது விரைவில் “பாரத் மார்ட்” என்ற ஒரு புதிய மின் வணிகம் தொடர்பான வலை தளத்தை அறிமுகப்படுத்த வாக்குறுதி அளித்துள்ளது.