TNPSC Thervupettagam

16வது நிதி ஆணையத்தின் பதவிக் கால நீட்டிப்பு

October 19 , 2025 5 days 39 0
  • அரசாங்கமானது 16வது நிதி ஆணையத்தின் பதவிக் காலத்தை 2025 ஆம் ஆண்டு நவம்பர் 30 ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது.
  • இந்த ஆணையமானது அரவிந்த் பனகாரியாவினைத் தலைவராக கொண்டு 2023 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதியன்று உருவாக்கப்பட்டது.
  • இது 2026–2031 ஆம் ஆண்டிற்கான மத்திய மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான வரி பகிர்வை பரிந்துரைக்கும்.
  • அறிக்கை சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு முதலில் 2025 ஆம் ஆண்டு அக்டோபர் 31 ஆம் தேதியாக இருந்தது.
  • இது 2005 ஆம் ஆண்டு பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழான பேரிடர் மேலாண்மை நிதியுதவியையும் மதிப்பாய்வு செய்யும்.
  • இந்த ஆணையத்தில் பொருளாதார வல்லுநர்கள் மற்றும் மூத்த அதிகாரிகள் உட்பட நான்கு உறுப்பினர்கள் உள்ளனர்.
  • 15வது நிதி ஆணையமானது 2021–2026 ஆம் ஆண்டிற்கு மாநிலங்களுக்கு 41% வரிப் பகிர்வைப் பரிந்துரைத்திருந்தது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்