TNPSC Thervupettagam

17வது தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை - முதல் கூட்டத்தொடர்

June 20 , 2026 2 days 137 0
  • 17வது தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் முதல் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்கியது.
  • மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, ஆளுநர் உரை எந்தவொரு இடையூறும் இன்றி அவையில் முழுமையாக வாசிக்கப்பட்டது.
  • முதன்முறையாக, ஆளுநர் உரையின் தொடக்கத்திலும் முடிவிலும் தேசிய கீதம் இசைக்கப் பட்டது.
  • இந்த கூட்டத்தொடர் மாநில வாழ்த்தான 'தமிழ்த்தாய் வாழ்த்து'டன் தொடங்கி, அதனைத் தொடர்ந்து தேசிய கீதத்துடன் ஆரம்பித்தது.
  • இது ஆளுநர் உரையின் இறுதியில் மட்டுமே தேசிய கீதம் இசைக்கும் முந்தைய மரபிலிருந்து ஒரு மாற்றத்தைக் குறிக்கிறது.
  • மத்திய அரசு சாதிவாரி கணக்கெடுப்புப் பணியை முடித்த பிறகு, தமிழ்நாடு அரசு சமூக நீதி கணக்கெடுப்பை நடத்தும் என்று அறிவித்துள்ளது.
  • இயற்கை வளங்களைப் பாதுகாக்கவும், சுற்றுச்சூழல் சமநிலையைப் பராமரிக்கவும் மாநில அரசு ஒரு விரிவான நிலையான சுற்றுலாவழிக் கொள்கையை உருவாக்கும்.
  • கல்வியை பொதுப் பட்டியலிலிருந்து மாநிலப் பட்டியலுக்கு மாற்றுவதற்கான முயற்சிகளை அரசு தொடர்ந்து மேற்கொள்ளும்.
  • தமிழ்நாடு அரசு தனது இருமொழிக் கொள்கையான தமிழ் மற்றும் ஆங்கிலத்திற்கு மீண்டும் தன் அர்ப்பணிப்பை உறுதிப்படுத்தியுள்ளது.
  • மும்மொழிக் கொள்கையை நிராகரித்து, பள்ளிகளில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தை மட்டுமே ஆதரித்து 1968 ஆம் ஆண்டு சி. என். அண்ணாதுரை தலைமையில் நிறைவேற்றப் பட்ட சட்டமன்றத் தீர்மானத்தை அரசு நினைவு கூர்ந்தது.
  • சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் அதன் மதுரை கிளையின் வாதாடும் மொழியாக தமிழைப் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என்று மத்திய அரசை சட்டமன்றம் வலியுறுத்தியது.
  • சென்னையில் உச்ச நீதிமன்றத்தின் அமர்வு ஒன்றை அமைக்கவும் மாநில அரசு கோரிக்கை விடுத்துள்ளது.
  • தேசிய கல்விக் கொள்கை (NEP), 2020-ஐ அரசு கடுமையாக எதிர்க்கும் என்று அறிவித்து உள்ளது.
  • தமிழ்நாடு 2036 ஆம் ஆண்டிற்குள் 1.5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாறுவதை இலக்காக நிர்ணயித்துள்ளது.
  • கீழடி, ஆதிச்சநல்லூர், கொடுமணல், மயிலாடும்பாறை, சிவகளை, அழகன்குளம், அரிக்கமேடு, சாளுவன்குப்பம் மற்றும் பூம்புகார் ஆகிய இடங்களில் அரசு தொல்லியல் ஆய்வுகளைத் தொடர்ந்து மேற்கொள்ளும்.
  • கீழடி மற்றும் ஆதிச்சநல்லூர் தொல்லியல் தளங்களுக்கு UNESCO உலக பாரம்பரிய தள அந்தஸ்தைப் பெற அரசு முயலும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்