TNPSC Thervupettagam

17வது பிரிக்ஸ் உச்சி மாநாடு 2025

July 16 , 2025 15 hrs 0 min 63 0
  • 17வது வருடாந்திர பிரிக்ஸ் உச்சி மாநாடு (2025) ஆனது பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் நடைபெற்றது.
  • 2012 ஆம் ஆண்டு ஹு ஜின்டாவோவுக்குப் பிறகு சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராகப் பொறுப்பேற்ற பிறகு, சீன அதிபர் முதல் முறையாக இந்த உச்சி மாநாட்டில் கலந்து கொள்ளவில்லை.
  • இந்த நிகழ்வின் கருத்துரு, "Strengthening Global South Cooperation for More Inclusive and Sustainable Governance" என்பதாகும்.
  • அவை ரியோ டி ஜெனிரோ பிரகடனத்தில் கையெழுத்திட்டன.
  • இந்தோனேசியாவானது 2025 ஆம் ஆண்டில் அதிகாரப்பூர்வமாக பிரிக்ஸ் அமைப்பில் இணைந்தது.
  • 2024 ஆம் ஆண்டில், ஈரான், ஐக்கிய அரபு அமீரகம், எகிப்து மற்றும் எத்தியோப்பியா ஆகியவை இந்தக் குழுவில் இணைந்தன.
  • இந்த உச்சி மாநாடு ஆனது பெலாரஸ், பொலிவியா, கியூபா, கஜகஸ்தான், மலேசியா, தாய்லாந்து, உகாண்டா மற்றும் உஸ்பெகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளுக்கு இணை பங்குதார அந்தஸ்தை விரிவுபடுத்தி, ஒரு புதிய "பங்குதார நாடுகள்" என்ற வகையை அறிமுகப் படுத்தியது.
  • சவுதி அரேபியாவானது இன்னும் அதன் பிரிக்ஸ் உறுப்பினர் அந்தஸ்தை அதிகாரப் பூர்வமாக்கவில்லை, அதே நேரத்தில் 2024 ஆம் ஆண்டில் அமைப்பில் சேரும் என்று எதிர்பார்க்கப் பட்ட அர்ஜென்டினா பின்னர் விலகியது.
  • இந்தியா பிரிக்ஸ் அமைப்பின் தலைமைத்துவத்தினை ஏற்றுக் கொண்டு 2026 ஆம் ஆண்டில் 18வது பிரிக்ஸ் உச்சிமாநாட்டை நடத்தும்.
  • இந்த நிகழ்வின் கருத்துரு, 'Building Resilience and Innovation for Cooperation and Sustainability' என்பதாகும்.
  • பிரிக்ஸ் அமைப்பானது உலக மக்கள்தொகையில் 45% மற்றும் உலக மொத்த உள் நாட்டு உற்பத்தியில் 37.3% பங்கினை கொண்டுள்ளது என்பதோடு இது ஐரோப்பிய ஒன்றியத்தின் 14.5% மற்றும் G7 நாடுகளின் 29.3% பங்கினை விட அதிகமாகும்.
  • பிரிக்ஸ் அமைப்பிற்கென நிரந்தர இருக்கை அல்லது பிரத்தியேக செயலகம் இல்லை.
  • உலகளாவிய வர்த்தகத்தில் 18 சதவீதத்திற்கும் அதிகமாகப் பங்களித்தாலும், பிரிக்ஸ் நாடுகளுக்கு இடையேயான வர்த்தகம் 2.2% என்ற அளவில் மிக குறைவாகவே உள்ளது (2022).

17வது பிரிக்ஸ் உச்சிமாநாட்டின் முடிவுகள்

  • உலகளாவிய நிர்வாகச் சீர்திருத்தம்: ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் இலத்தீன் அமெரிக்காவிலிருந்து அதிக நிரந்தர உறுப்பினர்களைச் சேர்ப்பதற்கான ஐ.நா. பாதுகாப்புச் சபையின் விரிவாக்க நடவடிக்கையினை பிரிக்ஸ் ஆதரித்தது.
  • நிலையான மேம்பாடு: வளர்ந்து வரும் நாடுகளுக்கான வளங்களைத் திரட்டுவதற்காக பருவநிலை நிதி குறித்தத் தலைவர்களின் கட்டமைப்பு பிரகடனத்தை பிரிக்ஸ் ஏற்றுக் கொண்டது.
  • அமைதி மற்றும் பாதுகாப்பு: பிரிக்ஸ் "ஆப்பிரிக்கப் பிரச்சனைகளுக்கான ஆப்பிரிக்க தீர்வுகளை" மீண்டும் உறுதிப்படுத்தியது, காசா போர் நிறுத்தம் மற்றும் இரு நாடுகளின் தீர்வுக்கு அழைப்பு விடுத்தது என்பதோடு பஹல்காம் தாக்குதலையும் கண்டித்தது.
  • நிதி ஒத்துழைப்பு: அமெரிக்க டாலரைச் சார்ந்திருக்கும் நிலையை குறைப்பதற்காக பன்னாட்டுப் பண வழங்கீட்டு முன்னெடுப்பு குறித்தப் பேச்சுவார்த்தைகளை பிரிக்ஸ் அமைப்பு முன்னெடுத்தது.
  • உலகளாவிய செயற்கை நுண்ணறிவு ஆளுகை குறித்த தலைவர்களின் அறிக்கையை பிரிக்ஸ் ஏற்றுக் கொண்டு, தரவுப் பொருளாதார ஆளுகை புரிதலை நிறைவு செய்தது, மேலும் கூட்டு விண்வெளி ஆய்வுக்காக பிரிக்ஸ் நாடுகளின் விண்வெளி சபையினை உருவாக்க ஒப்புக் கொண்டது.
  • சுகாதார ஏற்றத்தாழ்வுகளைச் சமாளிப்பதற்காக பிரிக்ஸ் நாடுகள் சமூக ரீதியாக தீர்மானிக்கப்பட்ட நோய்களை (காசநோய்) நீக்குவதற்கான ஒரு கூட்டாண்மையைத் தொடங்கியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்