TNPSC Thervupettagam

17வது காலநிலை மாற்றத்திற்கான செயல்திறன் குறியீடு 2022

November 13 , 2021 1369 days 605 0
  • இது ஜெர்மன் வாட்ச், நியூ க்ளைமேட் இன்ஸ்டிடியூட் மற்றும் க்ளைமேட் ஆக்சன் நெட்வொர்க் ஆகியவற்றால் தொகுக்கப்பட்டுள்ளது.
  • இது 60 நாடுகள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் காலநிலைத் தணிப்பு முன்னேற்றத்தைக் கண்காணிக்கிறது.
  • அனைத்துக் குறியீட்டு வகைகளிலும் எந்த நாடும் போதுமான அளவில் செயல்படாததால், ஒட்டு மொத்தத் தரவரிசையில் முதல் மூன்று இடங்கள் காலியாக வைக்கப்பட்டுள்ளன.
  • பசுமை இல்ல வாயு உமிழ்வுப் பிரிவிலும் முதல் மூன்று இடங்கள் காலியாக வைக்கப் பட்டுள்ளன.
  • பசுமை இல்ல வாயு உமிழ்வின் அடிப்படையில், ஸ்வீடன், எகிப்து, சிலி மற்றும் இங்கிலாந்து ஆகியவை முதல் 7 இடங்களில் உள்ளன.
  • ஒட்டு மொத்தத் தரவரிசையில் இந்தியா 69.22 புள்ளிகளுடன் 10வது இடத்தில் உள்ளது.
  • புதுப்பிக்கத்தக்க எரிசக்தியில் 'நடுத்தர' பிரிவில் இருப்பதோடு சேர்த்து, மற்ற பிரிவுகளில் இந்தியா உயர் செயல்திறன் கொண்டதாக விளங்குகிறது.
  • ஒட்டு மொத்தமாக, கஜகஸ்தான் மற்றும் சவுதி அரேபியாவுடன் ஆஸ்திரேலியா, தென் கொரியா மற்றும் ரஷ்யா மற்றும் அமெரிக்கா ஆகியவை  குறைந்த செயல்திறன் கொண்ட நாடுகளாக உள்ளன.
  • சீனா ஒட்டுமொத்தமாக இதில் 37வது இடத்தில் உள்ளதோடு ஒட்டு மொத்த மதிப்பீட்டில் "குறைவான" செயல்திறன் என்ற பிரிவில் உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்