17வது தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை - முதல் கூட்டத்தொடர்
June 20 , 2026 2 days 136 0
17வது தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் முதல் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்கியது.
மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, ஆளுநர் உரை எந்தவொரு இடையூறும் இன்றி அவையில் முழுமையாக வாசிக்கப்பட்டது.
முதன்முறையாக, ஆளுநர் உரையின் தொடக்கத்திலும் முடிவிலும் தேசிய கீதம் இசைக்கப் பட்டது.
இந்த கூட்டத்தொடர் மாநில வாழ்த்தான 'தமிழ்த்தாய் வாழ்த்து'டன் தொடங்கி, அதனைத் தொடர்ந்து தேசிய கீதத்துடன் ஆரம்பித்தது.
இது ஆளுநர் உரையின் இறுதியில் மட்டுமே தேசிய கீதம் இசைக்கும் முந்தைய மரபிலிருந்து ஒரு மாற்றத்தைக் குறிக்கிறது.
மத்திய அரசு சாதிவாரி கணக்கெடுப்புப் பணியை முடித்த பிறகு, தமிழ்நாடு அரசு சமூக நீதி கணக்கெடுப்பை நடத்தும் என்று அறிவித்துள்ளது.
இயற்கை வளங்களைப் பாதுகாக்கவும், சுற்றுச்சூழல் சமநிலையைப் பராமரிக்கவும் மாநில அரசு ஒரு விரிவான நிலையான சுற்றுலாவழிக் கொள்கையை உருவாக்கும்.
கல்வியை பொதுப் பட்டியலிலிருந்து மாநிலப் பட்டியலுக்கு மாற்றுவதற்கான முயற்சிகளை அரசு தொடர்ந்து மேற்கொள்ளும்.
தமிழ்நாடு அரசு தனது இருமொழிக் கொள்கையான தமிழ் மற்றும் ஆங்கிலத்திற்கு மீண்டும் தன் அர்ப்பணிப்பை உறுதிப்படுத்தியுள்ளது.
மும்மொழிக் கொள்கையை நிராகரித்து, பள்ளிகளில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தை மட்டுமே ஆதரித்து 1968 ஆம் ஆண்டு சி. என். அண்ணாதுரை தலைமையில் நிறைவேற்றப் பட்ட சட்டமன்றத் தீர்மானத்தை அரசு நினைவு கூர்ந்தது.
சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் அதன் மதுரை கிளையின் வாதாடும் மொழியாக தமிழைப் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என்று மத்திய அரசை சட்டமன்றம் வலியுறுத்தியது.
சென்னையில் உச்ச நீதிமன்றத்தின் அமர்வு ஒன்றை அமைக்கவும் மாநில அரசு கோரிக்கை விடுத்துள்ளது.
தேசிய கல்விக் கொள்கை (NEP), 2020-ஐ அரசு கடுமையாக எதிர்க்கும் என்று அறிவித்து உள்ளது.
தமிழ்நாடு 2036 ஆம் ஆண்டிற்குள் 1.5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாறுவதை இலக்காக நிர்ணயித்துள்ளது.
கீழடி, ஆதிச்சநல்லூர், கொடுமணல், மயிலாடும்பாறை, சிவகளை, அழகன்குளம், அரிக்கமேடு, சாளுவன்குப்பம் மற்றும் பூம்புகார் ஆகிய இடங்களில் அரசு தொல்லியல் ஆய்வுகளைத் தொடர்ந்து மேற்கொள்ளும்.
கீழடி மற்றும் ஆதிச்சநல்லூர் தொல்லியல் தளங்களுக்கு UNESCO உலக பாரம்பரிய தள அந்தஸ்தைப் பெற அரசு முயலும்.