பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் 18வது ASEAN-இந்தியா உச்சி மாநாட்டில் பங்கேற்றார்.
ASEAN-இந்தியா உச்சி மாநாடானது, உயர்மட்ட நிலையில் இணைந்து செயல்படுவதற்காக இந்தியா மற்றும் ASEAN நாடுகளுக்கான ஒரு வாய்ப்பினை வழங்குவதற்காக ஒவ்வோர் ஆண்டும் நடத்தப்படுகிறது.
பிரதமர் மோடி அவர்கள், ASEAN-இந்தியா உத்திசார் கூட்டிணைவின் நிலை குறித்து 18வது ASEAN-இந்தியா உச்சி நாட்டில் ஆய்வு செய்ய உள்ளார்.
புரூனே நாட்டினுடைய சுல்தானின் அழைப்பின் பேரில் பிரதமர் மோடி அவர்கள் இந்த உச்சி மாநாட்டில் பங்கேற்கிறார்.
இது மோடியால் பங்கேற்கப் படும் 9வது ஆசியான் இந்தியா உச்சி மாநாடு ஆகும்.
2022 ஆம் ஆண்டானது ஆசியான் இந்தியா உறவுகளுக்கான கூட்டணியின் 30வது வருடத்தைக் குறிப்பதோடு, அந்த வருடம் ஆசியான்-இந்தியா நட்பு வருடம் என்றும் அனுசரிக்கப் படும்.