TNPSC Thervupettagam

18 நாடுகளின் 38 செயற்கைக்கோள்கள் - இரஷ்யா

March 26 , 2021 1597 days 720 0
  • கஜகஸ்தானில் உள்ள பைக்கானூர் காஸ்மோடிரோமில் இருந்து 18 நாடுகளுடைய 38 செயற்கைக்  கோள்களை இரஷ்யா விண்ணில் செலுத்தி அவற்றை விண்வெளியின் சுற்று வட்டப்பாதையில் நிலை நிறுத்தியுள்ளது.
  • இரஷ்ய விண்வெளி நிறுவனமான ராஸ்கோஸ்மாஸ் தனது சோயுஸ் ராக்கெட் சாம்பல் நிற மற்றும் மேகமூட்டமான வானைக் கிழித்துக் கொண்டு விண்ணில் பாய்ந்த படக்காட்சிகளை வெளியிட்டுள்ளது.
  • இந்த ராக்கெட் ஜப்பான், தென்கொரியா, சவுதி அரேபியா, கனடா, இத்தாலி, ஜெர்மனி மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளின் செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவியுள்ளது.
  • இந்த ஏவுகணை “சேலஞ்ஜ் – 1” என்ற செயற்கைக்கோளையும் விண்ணில் செலுத்தி உள்ளது.
  • “சேலஞ்ஜ்–1 செயற்கைக்கோள்” டெல்நெட் என்ற ஒரு தொலைதொடர்புக் குழுவினால் உருவாக்கப்பட்டு முழுவதுமாக துனிசியாவில் தயாரிக்கப்பட்ட முதல் செயற்கைக் கோள் ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்