18 மசோதாக்களில் ஒன்பது மசோதாக்களுக்கு ஆளுநரின் ஒப்புதல்
November 7 , 2025 3 days 43 0
மாநிலச் சட்டமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடரில் ஏற்றுக் கொள்ளப்பட்ட 18 மசோதாக்களில் ஒன்பது மசோதாக்களுக்கு ஆளுநர் R.N. ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.
ஆளுநரின் ஒப்புதலைப் பெற்ற ஒன்பது மசோதாக்களில் தமிழ்நாடு நிதிப் பொறுப்பு (திருத்தம்) மசோதா, 2024 அடங்கும்.
2024 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில், முதலில் அவையால் ஏற்றுக் கொள்ளப்பட்ட இந்த மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பினார்.
இந்த அமர்வின் போது அந்த மசோதா மீண்டும் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
சபைக்குத் திருப்பி அனுப்பப்பட்ட ஒரு மசோதாவிற்கு ஆளுநர் ரவி ஒப்புதல் அளித்தது இதுவே முதல் முறை ஆகும்.
மாநில அரசாங்கத்துடன் பல வருடங்களாக ஏற்பட்ட மோதல்களுக்குப் பிறகு, அவர் தனது அரசியலமைப்பு கடமைகளுக்கு இணங்குவதை இது குறிக்கிறது.
ஆளுநர்கள் தமது ஒப்புதலைக் காலவரையின்றி தாமதப்படுத்தவோ அல்லது நிறுத்தி வைக்கவோ கூடாது என்றும், அத்தகையச் செயலற்ற தன்மை என்பது பொறுப்பான நிர்வாகத்தின் கொள்கைகளைக் குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது என்றும் உச்ச நீதிமன்றம் கூறியதைத் தொடர்ந்து ஆளுநரின் இந்த முடிவு எடுக்கப் பட்டுள்ளது.
அக்டோபர் 31 ஆம் தேதி நிலவரப் படி, தமிழ்நாடு சித்த மருத்துவப் பல்கலைக்கழக மசோதா, 2025 உட்பட எட்டு மசோதாக்கள் இன்னும் ஆளுநரின் பரிசீலனையில் உள்ளன.
இது முதலில் 2022 ஆம் ஆண்டில் அவையால் ஏற்றுக் கொள்ளப் பட்டாலும், அந்த மசோதாவைத் திருத்துவதற்கான சில பரிந்துரைகளுடன் ஆளுநரால் அது திருப்பி அனுப்பப் பட்டது.
சட்டமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடரில் ஏற்றுக்கொள்ளப்பட்ட 18 மசோதாக்களில், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் கல்வியாளர்களின் பரவலான விமர்சனங்களுக்குப் பிறகு, மாநில அரசானது 2025 ஆம் ஆண்டு தமிழ்நாடு தனியார் பல்கலைக்கழகங்கள் (திருத்தம்) மசோதவினைத் திரும்பப் பெற்றுள்ளது.
ஆளுநரால் ஒப்புதல் அளிக்கப்பட்ட பிற மசோதாக்களில் தமிழ்நாடு ஊதியம்/சம்பளம் வழங்கீட்டு (திருத்தம்) மசோதா; தமிழ்நாடு தள்ளுபடி/ரத்து மசோதா; தமிழ்நாடு ரத்து (இரண்டாவது) மசோதா; தமிழ்நாடு நெடுஞ்சாலைகள் (திருத்தம்) மசோதா; தமிழ்நாடு கடல்சார் வாரியம் (திருத்தம்) மசோதா; தமிழ்நாடு மின்சார நுகர்வு அல்லது விற்பனை மீதான வரி (திருத்தம்) மசோதா; தமிழ்நாடு தனியார் கல்லூரிகள் (ஒழுங்குமுறை) திருத்த மசோதா; மற்றும் தமிழ்நாடு ஒதுக்கீட்டு (எண்.6) மசோதா ஆகியவை அடங்கும்.