TNPSC Thervupettagam

1817 பைக்கா புரட்சி

December 5 , 2021 1610 days 885 0
  • ஒடிசாவின் 1817 ஆம் ஆண்டு பைக்கா புரட்சியினை தேசியக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் கழகத்தின் 8 ஆம் வகுப்பு வரலாற்றுப் பாடப் புத்தகத்தில் ஒரு நேர்வு ஆய்வாகச் சேர்க்க உள்ளது.
  • மத்தியக் கலாச்சாரத் துறை அமைச்சர் கிசன் ரெட்டி சமீபத்தில் இந்தப் பரிந்துரையை அளித்துள்ளார்.
  • பைக்காக்கள் என்போர் 16 ஆம் நூற்றாண்டு முதல் ஒடிசா அரசர்களால் பல்வேறு சமூகக் குழுக்களில் இருந்து படையில் சேர்க்கப்பட்டவர் ஆவர்.
  • வாடகை இல்லாத நிலம் (நிஷ்-கர்-ஜாகிர்ஸ்) மற்றும் பட்டங்களுக்குப் பதிலாக அவர்கள் பாதுகாப்புச் சேவைகளை வழங்கினர்.
  • இவர்கள் ஒடிசாவின் பாரம்பரிய நில உரிமையாளர்களாகவும், போர் வீரர்களாகவும் விளங்கினர்.
  • 1803 ஆம் ஆண்டில் கிழக்கிந்தியக் கம்பெனியின் படைகள் ஒடிசாவின் பெரும்பாலான பகுதிகளைக் கைப்பற்றிய போது, குர்தாவின் அரசர் தனது அதிகாரத்தை இழந்தார்.
  • அதனைத் தொடர்ந்து பைக்காக்களின் கௌரவம் வீழ்ச்சியுற்றதனால் அவர்கள் கிழக்கிந்தியக் கம்பெனியை எதிர்த்துக் கலகம் செய்தனர்.
  • பிரிட்டிஷ் அரசு இந்தப் பிரச்சினையை ஆய்வு செய்வதற்கு வால்டர் ஈவர் என்பவர் தலைமையில் ஓர் ஆணையத்தை அமைத்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்