TNPSC Thervupettagam

1857 ஆம் ஆண்டு தாந்தியா தோபேயின் கடிதம்

May 2 , 2026 15 hrs 0 min 43 0
  • கியான் பாரதம் திட்டத்தின் கீழ் மத்தியப் பிரதேசக் காப்பகங்களில் இருந்து 1857 ஆம் ஆண்டைச் சேர்ந்த தாந்தியா தோபேயின் கடிதம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
  • தாந்தியா தோபே (1814-1859) பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிரான 1857 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தியப் பெருங்கலகத்தின் முக்கிய தலைவராக இருந்தார்.
  • அவர் நானா சாகிப் (இரண்டாம் பாஜி ராவின் வளர்ப்பு மகன்) தலைமையின் கீழ் பணியாற்றினார் மற்றும் கான்பூரில் நடந்த முக்கியப் போர்களை வழி நடத்தினார்.
  • அவர் ராணி லட்சுமிபாயுடன் இணைந்து போர் புரிந்தார், பின்னர் குவாலியரில் கிளர்ச்சிப் படைகளின் கட்டுப்பாட்டை ஏற்றார்.
  • முக்கியப் போர்களுக்குப் பிறகு மத்திய இந்தியாவில் தனது எதிர்ப்பைத் தொடர அவர் கொரில்லா போர் முறையைப் பயன்படுத்தினார்.
  • அவர் ஆங்கிலேயர்களால் சிறை பிடிக்கப்பட்டு, நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு, 1859 ஆம் ஆண்டு தூக்கிலிடப்பட்டார்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்