TNPSC Thervupettagam

1882 ஆம் ஆண்டு தமிழ்நாடு வனச் சட்டத்தின் திருத்தம்

January 14 , 2025 109 days 205 0
  • தமிழ்நாடு மாநிலச் சட்டமன்றமானது 1882 ஆம் ஆண்டு தமிழ்நாடு வனச் சட்டத்தினை மேற்கொண்டு திருத்தியமைப்பதற்கான ஒரு மசோதாவினை நிறைவேற்றி உள்ளது.
  • காடிழப்பை ஈடு செய்வதற்காக என்று காடு வளர்ப்பு நிலங்களை காப்புக் காடுகளாக அறிவிக்கும் ஒரு செயல்முறையை விரைவுபடுத்துவதை இது நோக்கமாகக் கொண்டு உள்ளது.
  • எந்தவொரு வன நிலமும், வனம் சாராத நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப் படும் போதெல்லாம், அந்தப் பயனர் முகமையானது அதற்கானப் பதிலீட்டுக் காடு வளர்ப்பு நோக்கத்திற்காக குறிப்பிட்ட அளவிலான நிலத்தை வழங்க வேண்டும்.
  • இந்தச் சட்டத்தின் 16வது பிரிவின் கீழ் இந்த அறிவிப்பை வெளியிடச் செய்வதற்கான அரசாங்கத்தின் பெரும் அதிகாரங்களை மாவட்ட ஆட்சியர் பதவிக்குக் குறையாத தகுதியிலான வருவாய்த் துறை அதிகாரிக்கு, இந்தச் சட்டத்தின் 65வது பிரிவினைத் திருத்துவதன் மூலம் வழங்குவதற்கும் இந்த மசோதா முயல்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்