TNPSC Thervupettagam

19 புதிய பயிர் வகைகள்

May 22 , 2025 8 hrs 0 min 20 0
  • கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் (TNAU) ஆனது, 2025 ஆம் ஆண்டிற்காக வெவ்வேறு வேளாண் பருவநிலை சார்ந்தஒ பகுதிகளுக்கு ஏற்ற 19 புதிய பயிர் வகைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
  • மூன்று வகையான அரிசி வகைகள், ஒரு கலப்பின மக்காச்சோள வகை, ஒரு உளுந்து வகை, வறட்சியைத் தாங்கும் நிலக்கடலை வகை மற்றும் பகுதியளவு உயரம் கொண்ட குட்டை கலப்பின ஆமணக்கு வகை ஆகியவை இதில் அடங்கும்.
  • இந்த மூன்று அரிசி வகைகளானது, பகுதியளவு உயரம் குன்றியதும் வறட்சியைத் தாங்கும் தன்மையுடைய CO59 மற்றும் ADT 56 & ADT 60 ஆகிய இரண்டு நடுத்தர அளவிலான மெல்லிய தானிய வகைகள் ஆகியவற்றை உள்ளடக்கியிருந்தது.
  • மக்காச் சோள கலப்பின வகையானது COH(M) 12 என்று அழைக்கப்பட்டது.
  • ஒரு உளுந்து வகையான VBN 12 ஆனது பாசனம் மற்றும் நெல் சாகுபடிப் பருவத்தில் பயிரிடப் பட்ட பயிர் எச்சங்களை ஒரு உரமாகக் கொண்டு அதற்கு அடுத்தபடியாக சாகுபடி செய்யப் படும் நிலங்களுக்கு ஏற்றது.
  • வறட்சியைத் தாங்கும் நிலக்கடலை வகைக்கு CTD 1 என்றும், பகுதியளவு உயரம் வளரும் குட்டை கலப்பின ஆமணக்கு வகைக்கு YRCH என்றும் பெயரிடப்பட்டது.
  • தோட்டக்கலைப் பயிர்களில், காய்கறிப் பயிர்களில் நான்கு வகைகளும், PLR 1 எனப் படும் சிறிய அளவிலான பழ வகையைக் கொண்ட வெண்பூசணி வகையும் அறிமுகப் படுத்தப் பட்டது.
  • பழப் பயிர்களில் அறிமுகப்படுத்தப்பட்ட மூன்று புதிய வகைகளில், தண்டு முறியாதத் தன்மையுடைய, குட்டை ரக வாழை வகையான காவேரி வாமன், அவோகேடோ TKD 2 மற்றும் அமில எலுமிச்சை வகை SNKL 1 ஆகியவை அடங்கும்.
  • ஒரு மலர் பயிர் தோவாளை 1 அரளி/நெரியம், ஒரு மசாலா பயிர் (ஜாதிக்காய் PPI 1), ஒரு தேங்காய் பயிர் ALR, மற்றும் ஒரு மருத்துவ பயிர் வகை CO 1 சிறுகுறிஞ்சன் ஆகியவை அறிமுகப் படுத்தப்பட்டன.
  • மேலும், சிறந்த ஆயுட்காலம் கொண்ட KKM காளான் வகை அறிமுகப்படுத்தப்பட்டது.
  • தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகமானது அதன் வரலாற்றில் கடந்த 100 ஆண்டுகளில் 929 பயிர் வகைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்