கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் (TNAU) ஆனது, 2025 ஆம் ஆண்டிற்காக வெவ்வேறு வேளாண் பருவநிலை சார்ந்தஒ பகுதிகளுக்கு ஏற்ற 19 புதிய பயிர் வகைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
மூன்று வகையான அரிசி வகைகள், ஒரு கலப்பின மக்காச்சோள வகை, ஒரு உளுந்து வகை, வறட்சியைத் தாங்கும் நிலக்கடலை வகை மற்றும் பகுதியளவு உயரம் கொண்ட குட்டை கலப்பின ஆமணக்கு வகை ஆகியவை இதில் அடங்கும்.
இந்த மூன்று அரிசி வகைகளானது, பகுதியளவு உயரம் குன்றியதும் வறட்சியைத் தாங்கும் தன்மையுடைய CO59 மற்றும் ADT 56 & ADT 60 ஆகிய இரண்டு நடுத்தர அளவிலான மெல்லிய தானிய வகைகள் ஆகியவற்றை உள்ளடக்கியிருந்தது.
மக்காச் சோள கலப்பின வகையானது COH(M) 12 என்று அழைக்கப்பட்டது.
ஒரு உளுந்து வகையான VBN 12 ஆனது பாசனம் மற்றும் நெல் சாகுபடிப் பருவத்தில் பயிரிடப் பட்ட பயிர் எச்சங்களை ஒரு உரமாகக் கொண்டு அதற்கு அடுத்தபடியாக சாகுபடி செய்யப் படும் நிலங்களுக்கு ஏற்றது.
வறட்சியைத் தாங்கும் நிலக்கடலை வகைக்கு CTD 1 என்றும், பகுதியளவு உயரம் வளரும் குட்டை கலப்பின ஆமணக்கு வகைக்கு YRCH என்றும் பெயரிடப்பட்டது.
தோட்டக்கலைப் பயிர்களில், காய்கறிப் பயிர்களில் நான்கு வகைகளும், PLR 1 எனப் படும் சிறிய அளவிலான பழ வகையைக் கொண்ட வெண்பூசணி வகையும் அறிமுகப் படுத்தப் பட்டது.
பழப் பயிர்களில் அறிமுகப்படுத்தப்பட்ட மூன்று புதிய வகைகளில், தண்டு முறியாதத் தன்மையுடைய, குட்டை ரக வாழை வகையான காவேரி வாமன், அவோகேடோ TKD 2 மற்றும் அமில எலுமிச்சை வகை SNKL 1 ஆகியவை அடங்கும்.
ஒரு மலர் பயிர் தோவாளை 1 அரளி/நெரியம், ஒரு மசாலா பயிர் (ஜாதிக்காய் PPI 1), ஒரு தேங்காய் பயிர் ALR, மற்றும் ஒரு மருத்துவ பயிர் வகை CO 1 சிறுகுறிஞ்சன் ஆகியவை அறிமுகப் படுத்தப்பட்டன.
மேலும், சிறந்த ஆயுட்காலம் கொண்ட KKM காளான் வகை அறிமுகப்படுத்தப்பட்டது.
தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகமானது அதன் வரலாற்றில் கடந்த 100 ஆண்டுகளில் 929 பயிர் வகைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.