19 வயதுக்குட்பட்டோருக்கான உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி
November 8 , 2024 240 days 263 0
அமெரிக்காவின் கொலராடோவில் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்டோருக்கான உலக குத்துச் சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா 17 பதக்கங்களை வென்றுள்ளது.
இதில் ஆடவர் மற்றும் மகளிர் பிரிவுகளில் வென்ற நான்கு தங்கப் பதக்கங்களும் அடங்கும்.
9 ஆடவர் மற்றும் 10 மகளிர் அடங்கிய 19 குத்துச்சண்டை வீரர்கள் கொண்ட இந்திய அணியில், 12 தடகள வீரர்கள் இறுதிப் போட்டியை அடைந்தனர் என்பதோடு இதில் ஒவ்வொரு மகளிர் குத்துச்சண்டை வீராங்கனையும் பதக்கம் வென்றனர்.
நான்கு தங்கப் பதக்கம் வென்றவர்களில் பட்டியலில் உள்ள ஒரே ஆண் சாம்பியன் ஹேமந்த் சங்வான் ஆவார் என்ற நிலையில் இதில் மற்ற பெண் சாம்பியன்கள் கிரிஷா வர்மா, பார்த்தவி கிரேவால் மற்றும் வன்ஷிகா கோஸ்வாமி ஆகியோர் ஆவர்.