TNPSC Thervupettagam

1950 முதல் தமிழ்நாட்டின் முன்னேற்றம்

March 7 , 2026 4 days 80 0
  • தமிழ்நாட்டில் ஒரு அரசாங்கத்தால் தொடங்கப்பட்ட பிற முக்கியமான சமூகச் சீர் திருத்தங்களுடன், கை ரிக்‌ஷாக்களை ஒழித்தது ஒரு முக்கியமான ஒன்றாகும்.
  • மு.கருணாநிதி தலைமையிலான திமுக அரசு 1973 இல் இந்த நடைமுறையை ஒழித்தது.
  • இது திராவிட இயக்கத்தின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டது.
  • இது இந்தியாவில் சமூக நீதிச் சீர்திருத்தங்களில் இந்த மாநிலத்தை முன்னணியில் வைக்க உதவியது.
  • இருப்பினும், மேற்கு வங்கத்தில், இந்த மனிதாபிமானமற்ற இந்த அமைப்பை முடிவுக்குக் கொண்டு வர அம்மாநிலத்திற்கு மேலும் 30 ஆண்டுகள்ஆனது.
  • இத்தாலிய கம்யூனிஸ்ட் தலைவர் அன்டோனியோ கிராம்சி ஒரு உயிருள்ள சித்தாந்தத்துடன் கூடிய உயிருள்ள அறிவுஜீவிகள் என்று விவரிப்பதைப் போல திராவிட இயக்கம் தொடங்கப்பட்டுப் பிரச்சாரம் செய்யப்பட்டது.
  • அமெரிக்கா மற்றும் ஜப்பான் சுற்றுப்பயணங்களிலிருந்து திரும்பிய பிறகு, அண்ணா 1968 இல் அகில இந்திய வானொலியில் (AIR) இந்தியா போன்ற ஒரு நாட்டில், ஏராளமான மனிதவளம், தொழில்கள் மற்றும் மேம்பாட்டுத் திட்டங்கள் மூலதனம் சார்ந்ததாக இருப்பதை விட உழைப்பு சார்ந்ததாக இருக்க வேண்டும் என்று கூறினார்.
  • விவசாயத்தையே பெரும்பான்மையான மக்கள் நம்பியிருந்ததால், அண்ணாதுரை விவசாயத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க விரும்பினார்.
  • இன்று, தமிழ்நாடு மிகவும் தொழில்மயமான மாநிலமாக உள்ளது, என்பதோடு அனைத்துத் துறைகளிலும் அனைத்து வகையான வளர்ச்சியையும் அடைகிறது.
  • தமிழ்நாட்டில் போக்குவரத்தை கருணாநிதி தேசியமயமாக்கினார்.
  • தி.மு.க. அரசு இயற்றிய சட்டங்கள் தமிழ்நாட்டில் குத்தகைதாரர்கள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களுக்கு முக்கியமான வழிகளில் அதிகாரம் அளித்தன.
  • இது தாழ்த்தப்பட்ட சாதியினரிடையே அரசியல் அதிகாரத்தை ஒருங்கிணைத்தது.
  • 1969 ஆம் ஆண்டின் குத்தகை நிலப் பதிவுச் சட்டம் மிகவும் குறிப்பிடத்தக்க நடவடிக்கைகளில் ஒன்றாகும்.
  • 1973 ஆம் ஆண்டில், தி.மு.க. அரசு, ஐந்து நிலையான ஏக்கருக்கு மிகாமல் நிலத்தை முழுவதுமாகவோ அல்லது பகுதியாகவோ வாங்க குத்தகைதாரர்களுக்கு உரிமை வழங்கும் சட்டத்தை அறிமுகப் படுத்தியது.
  • 1970 இல் திருத்தப்பட்ட நில சீர்திருத்தச் சட்டம், நில உச்சவரம்பை 30 நிலையான ஏக்கரிலிருந்து 15 ஆகக் குறைத்தது.
  • எம்.ஜி. ராமச்சந்திரன் (எம்.ஜி.ஆர்) தலைமையிலான அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகும் இந்தச் சீர்திருத்தங்கள் தொடர்ந்தன.
  • 1979 ஆம் ஆண்டில் குத்தகைச் சட்டத்தில் திருத்தங்கள் குத்தகையை 25% ஆகக் குறைத்ததோடு, இயற்கைப் பேரழிவுகளின் போது வாடகை செலுத்தத் தவறும் சந்தர்ப்பங்களில் கூட குத்தகைதாரர்களை வெளியேற்றுவதிலிருந்து அது பாதுகாத்தன.
  • கேரளா மற்றும் மேற்கு வங்காளத்தில் உள்ள கம்யூனிஸ்ட் ஆட்சிகள் இதே போன்ற நிலச் சீர்திருத்தங்களை அமல்படுத்தின.
  • எம்ஜிஆரின் சத்து உணவுத் திட்டம் அதிக மாணவர்களைப் பள்ளிகளுக்கு ஈர்த்தது மற்றும் பள்ளி இடை நிற்றல் விகிதத்தை கணிசமாகக் குறைத்தது.
  • எம்.ஜி.ஆர்-இன் தனியார் பொறியியல் கல்லூரிகள் உருவாக்கக் கொள்கையால் தகவல் தொழில்நுட்பப் புரட்சியை மாநிலம் பயன்படுத்திக் கொள்ள முடிந்தது.
  • எம்ஜிஆருக்குப் பிறகு அதிமுகவின் தலைமைப் பொறுப்பை ஏற்ற ஜெயலலிதா, சமூக நீதிக்கான தனது உறுதிப்பாட்டில் உறுதியாக இருந்தார்.
  • இட ஒதுக்கீட்டுப் பிரச்சினையில், அதை 69% ஆக உயர்த்துவதன் மூலம் அவர் ஒரு படி மேலே சென்றார்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்