1965 ஆம் ஆண்டு போர் வெற்றியின் 60 ஆம் ஆண்டு நிறைவு
September 24 , 2025 3 days 45 0
1965 ஆம் ஆண்டில் நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான போரில் இந்தியாவின் வெற்றியின் வைர விழாவை இந்தியா கொண்டாடுகிறது.
1965 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 05 ஆம் தேதியன்று, பாகிஸ்தான் படைவீரர்கள் காஷ்மீர் உள்ளூர்வாசிகளாக வேடமணிந்து மெய் கட்டுப்பாட்டுப் பகுதியைக் (LOC) கடந்தனர்.
இந்த ஊடுருவல் உத்திக்கு ஜிப்ரால்டர் நடவடிக்கை என்ற குறியீட்டுப் பெயர் சூட்டப் பட்டது.
இந்திய இராணுவமானது அதற்குப் பதிலடி கொடுத்து பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் (PoK) உள்ள ஹாஜி பிர் கணவாயைக் கைப்பற்றியது.
செப்டம்பர் 01 ஆம் தேதியன்று, ஜம்முவில் உள்ள அக்னூர் நகரத்தைக் கைப்பற்றும் நோக்கில் பாகிஸ்தான் தனது கிராண்ட்ஸ்லாம் நடவடிக்கையை மேற்கொண்டது.
இராஜஸ்தான் உட்பட பல முனைகளில் இந்தப் போர் நடந்தது.
ஐ.நா. பாதுகாப்பு சபை இரு நாடுகளிடமிருந்தும் நிபந்தனையற்ற போர்நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்ததை அடுத்து, அந்தப் போர் 1965 ஆம் ஆண்டு செப்டம்பர் 23 ஆம் தேதியன்று முடிவுக்கு வந்தது.
1966 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் தாஷ்கண்டில் (தற்போது உஸ்பெகிஸ்தானில் உள்ளது) சோவியத் ஒன்றியத்தால் போர் நிறுத்தப் பேச்சுவார்த்தைகள் நடத்தப் பட்டன என்பதோடு இது தாஷ்கண்ட் ஒப்பந்தத்திற்கு வழிவகுத்தது.
இந்தியப் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி மற்றும் பாகிஸ்தான் அதிபர் அயூப் கான் ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.