1994 ஆம் ஆண்டு ருவாண்டா இனப் படுகொலை மீதான பிரதிபலிப்பிற்கான சர்வதேச தினம் - ஏப்ரல் 07
April 8 , 2019 2341 days 625 0
ருவாண்டா இனப் படுகொலை மீதான பிரதிபலிப்பிற்கான சர்வதேச தினமானது ஐ.நா சபையால் ஏப்ரல் 07 அன்று அனுசரிக்கப்படுகின்றது.
1994 ஆண்டில் நடைபெற்ற ருவாண்டா இனப் படுகொலையை நினைவு கூறும் சர்வதேச தினமாக இந்த தினமானது 2004 ஆம் ஆண்டு ஏப்ரல் 07 அன்று ஐ.நா சபையில் அங்கீகரிக்கப்பட்டது.
2019 ஆம் ஆண்டானது, மனித வரலாற்றில் இருண்ட அத்தியாயங்களில் ஒன்றான ருவாண்டாவில் டுட்ஸிகளுக்கு எதிரான இனப் படுகொலையின் 25-வது வருட நினைவு நாளைக் குறிக்கின்றது.
டுட்ஸி, மிதவாத ஹிட்டு, துவா மற்றும் இனப் படுகொலைகளை எதிர்க்கும் இதர இன மக்கள் என 8 லட்சத்திற்கும் மேற்பட்டோர் மூன்று மாதங்களுக்குள் தனியான முறையில் கொல்லப்பட்டனர்.