1994 ருவாண்டா இனப்படுகொலை குறித்த சர்வதேச நினைவு நாள் 2026 - ஏப்ரல் 07
April 7 , 2026 56 days 109 0
இந்த நாள் பலியானவர்களை நினைவு கூர்வது, கல்வி மற்றும் உரையாடல் மூலம் அமைதியை மேம்படுத்துவது மற்றும் எதிர்கால இனப் படுகொலைகளைத் தடுப்பது ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளது.
ருவாண்டாவில் 1994 ஆம் ஆண்டில் நடந்த இனப்படுகொலையில் பலியானவர்களை நினைவு கூரும் வகையில் 2003 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையினால் (UNGA) இந்த நாள் நிறுவப்பட்டது.
இந்த இனப்படுகொலையானது 1994 ஆம் ஆண்டு ஏப்ரல் 7 அன்று ஹுட்டு இன தலைமையிலான அரசாங்கத்தால் சிறுபான்மையினரான டூட்சி மக்கள் இலக்கு வைக்கப் பட்ட போது தொடங்கியது.
சுமார் 100 நாட்களில், சுமார் 1 மில்லியனுக்கும் அதிகமான டூட்சி மக்கள், மிதவாத ஹுட்டுக்கள் மற்றும் வன்முறையை எதிர்த்த மற்றவர்களுடன் சேர்த்து கொல்லப் பட்டனர்.
விழிப்புணர்வைப் பரப்பவும், பாகுபாடு மற்றும் வன்முறையைத் தடுக்கவும் இனப் படு கொலை குறித்த கல்வியை யுனெஸ்கோ ஊக்குவிக்கிறது.