1994 ஆம் ஆண்டு கம்பிவட தொலைக்காட்சி வலையமைப்பு விதிகளில் முக்கிய திருத்தங்கள்
October 5 , 2023 661 days 344 0
மத்திய தகவல் மற்றும் ஒளிப்பரப்பு (I&B) அமைச்சகமானது, 1994 ஆம் ஆண்டு கம்பிவட தொலைக்காட்சி வலையமைப்பு விதிகளைத் திருத்த உள்ளதாக அறிவித்துள்ளது.
இது அகலப்பட்டைச் சேவை வழங்குநர்களுடன் இந்த உள்கட்டமைப்பினைப் பகிர்ந்து கொள்வதற்கு கம்பிவட சேவை வழங்குனர் அமைப்புகளுக்கு உதவுகிறது.
இது பல் முனை சேவை வழங்கீட்டு நிறுவனங்களின் பதிவுகளைப் புதுப்பிப்பதற்கான ஒரு நடைமுறையை அறிமுகப்படுத்துகிறது.
இதில் கம்பிவட சேவை வழங்குனர்கள், தகவல் மற்றும் ஒளிப்பரப்பு அமைச்சகத்தின் ஒளிபரப்பு சேவை இணையதளத்தின் மூலமாக இயங்கலையில் பதிவு செய்ய அல்லது பதிவினைப் புதுப்பித்தலுக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
பதிவிற்கான செல்லுபடிக் காலம் என்பது 10 ஆண்டுகளுக்கு வழங்கப்படும் அல்லது புதுப்பிக்கப்படும்.
ஏழு மாதங்களுக்குள் காலாவதியாக உள்ள பதிவுகளைப் புதுப்பிப்பதற்கு சேவை வழங்குனர்கள் இயங்கலை வழியாக விண்ணப்பிக்க இயலும்.