1994 ஆம் ஆண்டு ருவாண்டாவில் நடைபெற்ற டுட்சிகளுக்கு எதிரான இனப் படுகொலையின் சர்வதேச பிரதிபலிப்பு தினம் - ஏப்ரல் 07
April 12 , 2024 386 days 217 0
2024 ஆம் ஆண்டில் 1994 ஆம் ஆண்டில் நடைபெற்ற டுட்சிகளுக்கு எதிரான இனப் படுகொலையின் 30வது ஆண்டு நினைவேந்தல் அனுசரிக்கப்பட்டது.
1994 ஆம் ஆண்டில் ருவாண்டாவில் நடைபெற்ற இனப்படுகொலையை நினைவு கூரும் வகையில் 2003 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையால் இத்தினம் நிறுவப் பட்டது.
டுட்சிகளுக்கு எதிரான இனப்படுகொலை என்று அழைக்கப்படும் ருவாண்டா இனப் படுகொலையானது, ருவாண்டாவில் உள்ள ஹுட்டு என்ற ஒரு பெரும்பான்மையினச் சமூகத்தினை சேர்ந்த அரசாங்கத்தினால் டுட்சி இனத்தவர் மீது மேற்கொள்ளப்பட்ட ஓர் இனப்படுகொலை ஆகும்.
1994 ஆம் ஆண்டு ஏப்ரல் 07 முதல் ஜூலை மாதத்தின் நடுப்பகுதி வரையிலான 100 நாட்கள் அளவிலான காலப்பகுதியில் சுமார் 800,000க்கும் அதிகமான அளவில் மக்கள் கொல்லப் பட்டனர்.