TNPSC Thervupettagam

1995-ஆம் ஆண்டில் ஸ்ரெப்ரெனிகாவில் நடந்த இனப்படுகொலை பற்றிய சர்வதேச நினைவேந்தல் மற்றும் இரங்கல் தினம் 2026 – ஜூலை 11

July 17 , 2026 11 days 79 0
  • இத்தினம் போஸ்னியா மற்றும் ஹெர்சகோவினாவில் 8,000-க்கும் மேற்பட்ட போஸ்னியாக் (போஸ்னிய முஸ்லிம்கள்) ஆண்கள் மற்றும் சிறுவர்கள் கொல்லப்பட்ட 1995-ஆம் ஆண்டின் ஸ்ரெப்ரெனிகா இனப்படுகொலையை நினைவு கூர்கிறது.
  • இத்தினம் 2024 ஆம் ஆண்டு மே 23 அன்று ஏற்றுக்கொள்ளப்பட்ட தீர்மானத்தின் மூலம் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையால் (UNGA) நிறுவப்பட்டது.
  • 1995 ஆம் ஆண்டு ஸ்ரெப்ரெனிகா இனப்படுகொலையால் பாதிக்கப்பட்டவர்களை கௌரவிக்கவும், நினைவேந்தல், நீதி மற்றும் இனப்படுகொலை தடுப்பு ஆகியவற்றை ஊக்குவிக்கவும் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 11 அன்று இது அனுசரிக்கப்படுகிறது.
  • இந்தத் தீர்மானம் இனப்படுகொலை மறுப்பு மற்றும் வரலாற்றுத் திருத்தல்வாதத்தை நிராகரிக்கிறது என்பதுடன் மேலும் எதிர்கால அட்டூழியங்களைத் தடுக்க கல்வி மற்றும் விழிப்புணர்வை ஊக்குவிக்கிறது.
  • சர்வதேச நீதிமன்றம் (ICJ) மற்றும் முன்னாள் யூகோஸ்லாவியாவிற்கான சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் (ICTY) ஆகியவை 1995 ஆம் ஆண்டு ஸ்ரெப்ரெனிகா கொலைகளை இனப்படுகொலை என்று தீர்ப்பளித்துள்ளன.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்