19வது திருத்தத்தை நீக்குதல்
August 27 , 2020
1812 days
808
- இலங்கை அதிபரான கோத்தபய ராஜபக்சே அவர்கள் அந்நாட்டு அரசியலமைப்பின் புகழ்மிக்க 19வது திருத்தத்தை நீக்குவதற்கான தனது எண்ணத்தை தெரிவித்து உள்ளார்.
- இது 2015 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. இது பல்வேறு முக்கியமான அம்சங்களைக் கொண்டுள்ளது. அவையாவன:
- அதிபர் மற்றும் நாடாளுமன்றத்தின் பதவிக் காலத்தை 6 ஆண்டிலிருந்து 5 ஆண்டுகளாகக் குறைப்பது.
- ஒருவர் 2 முறை மட்டுமே அதிபராக பதவி வகிப்பதற்கான கால வரம்பை மீண்டும் அறிமுகம் செய்வது.
- நான்கரை ஆண்டுகளுக்குப் பிறகு மட்டுமே நாடாளுமன்றத்தை அதிபர் கலைக்கச் செய்வது.
- அதிபர் அமைச்சரவையின் தலைவராகத் தொடர்வார். அவர் பிரதமரின் அறிவுரையின்படி அமைச்சர்களை நியமிப்பார்.
Post Views:
808