TNPSC Thervupettagam

2 புதிய உச்ச நீதிமன்ற நீதிபதிகள்

September 3 , 2025 21 days 86 0
  • இந்தியத் தலைமை நீதிபதி B.R. கவாய், நீதிபதிகள் அலோக் ஆராதே மற்றும் விபுல் M. பஞ்சோலி ஆகியோருக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
  • இந்த இரண்டு நீதிபதிகளின் பதவியேற்புடன், உச்ச நீதிமன்றம் அதன் முழு அனுமதிக்கப் பட்ட 34 என்ற நீதிபதிகள் எண்ணிக்கையை எட்டியது.
  • 2025 ஆம் ஆண்டு நவம்பர் 23 ஆம் தேதியன்று, தலைமை நீதிபதி கவாய் ஓய்வு பெறும் வரை இது தொடரும்.
  • நீதிபதி பஞ்சோலி 2031 ஆம் ஆண்டு அக்டோபர் 03 முதல் 2033 ஆம் ஆண்டு மே 27 ஆம் தேதியன்று ஓய்வு பெறும் வரையில், பணி மூப்பு அடிப்படையிலான விதிமுறையின் கீழ் இந்தியாவின் தலைமை நீதிபதியாக பதவியேற்க உள்ளார்.
  • அவரது நியமனச் செயல்முறையானது நீதிபதி தேர்வுக் குழுவின் உறுப்பினர்களில் ஒருவரான நீதிபதி B.V. நாகரத்னாவிடமிருந்து ஓர் அரிய கருத்து வேறுபாட்டைக் கண்டது.
  • தற்போது உச்ச நீதிமன்றத்தில் உள்ள ஒரே பெண் நீதிபதி இவர்தான்.
  • அகில இந்திய உயர் நீதிமன்ற நீதிபதிகளின் பணி மூப்பு பட்டியலில் நீதிபதி பஞ்சோலி 57வது இடத்தில் இருப்பதாகவும், அவரை விட மூத்த நீதிபதிகளில் பலரைப் பதவி உயர்வுக்கு பரிசீலிக்கலாம் என்றும் நீதிபதி B.V. நாகரத்னா குறிப்பிட்டார்.
  • நீதிபதி நாகரத்னா தனது மறுப்பில், அவரது நியமனம் நீதி நிர்வாகத்திற்கு "எதிர்மறை ஆனதாக" இருக்கும் என்றும், நீதிபதி தேர்வுக் குழுவின் நம்பகத் தன்மை ஆபத்தில் உள்ளது என்றும் எழுதினார்.
  • இருப்பினும், நீதிபதிகள் தேர்வுக் குழுவானது, 4:1 என்ற பெரும்பான்மையில், ஆகஸ்ட் 25 ஆம் தேதியன்று நீதிபதிகள் பஞ்சோலி மற்றும் ஆராதே ஆகியோரைப் பரிந்துரைத்தது.
  • ஆகஸ்ட் 25 ஆம் தேதியன்று வழங்கப்பட்ட நீதிபதிகள் தேர்வுக் குழுவின் தீர்மானத்துடன் தனது மறுப்புக் குறிப்பை வெளியிட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
  • இருப்பினும், அந்தக் குறிப்பு வெளியிடப்படவில்லை.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்