TNPSC Thervupettagam

2-வது இந்திய சைகை மொழி அகராதி

March 3 , 2019 2330 days 731 0
  • சமூக நீதி மற்றும் அதிகாரமளிப்புத் துறை அமைச்சர் தாவர்சந்த் கெலாட் இந்திய சைகை மொழி அகராதியின் (ISL - Indian Sign Language) 2-வது பதிப்பை புது தில்லியில் தொடங்கி வைத்தார்.
  • இந்த அகராதியானது மாற்றுத் திறன் உடையவர்களுக்கான அதிகாரமளிப்புத் துறையின் கீழ் இயங்கும் இந்திய சைகை மொழி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையத்தினால் (ISLRTC - Indian Sign Language Research and Training Centre) ஏற்படுத்தப்பட்டது.
  • 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் 50.71 இலட்சம் மக்கள் சரிவர காது கேளாதவர்களாக உள்ளனர்.
  • இது ISL-ன் பயன்பாட்டை பரவச் செய்தலுக்கு உதவுவதையும் சரிவர காது கேளாதவர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் சிறந்தவர்களாக விளங்கச் செய்வதையும் நோக்கங்களாகக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்