E20 (20 சதவீதம் எத்தனால் கலக்கப்பட்ட பெட்ரோல்) ரக பெட்ரோலினைப் படிப்படியாக அறிமுகப்படுத்தும் நடவடிக்கையானது ஏப்ரல் 01 ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது.
திட்டமிடப்பட்டதற்கு முன்பாகவே 10 சதவிகிதம் எத்தனால் (10 சதவிகிதம் எத்தனால், 90 சதவிகிதம் பெட்ரோல்) கலந்த பெட்ரோலை விநியோகிக்கும் இலக்கை இந்தியா 2022 ஜூன் மாதத்தில் அடைந்தது.
மேலும், 2030 ஆம் ஆண்டிற்குள் 20 சதவீத எத்தனால் கலந்த பெட்ரோலை விநியோகித்தல் என்ற இலக்கினை 5 ஆண்டுகளுக்குள் அடைவதற்காக 2025 என்று நிர்ணயித்துள்ளது.
20 சதவீத எத்தனால் கலவைக்கு 1,000 கோடி லிட்டர் எத்தனால் தேவைப்படும்.