20 வயதுக்குட்பட்டோருக்கான உலக சாம்பியன்ஷிப் போட்டி
August 12 , 2022 1117 days 607 0
கொலம்பியாவில் நடைபெற்ற 20 வயதுக்குட்பட்டோருக்கான உலகத் தடகளச் சாம்பியன் ஷிப் போட்டியில் ஆண்களுக்கான மூன்று நிலையிலான நீளம் தாண்டுதல் போட்டியில் செல்வ பிரபு திருமாறன் வெள்ளிப் பதக்கத்தினை வென்றார்.
இவர் ஜமைக்காவின் ஜேடன் ஹிபர்ட்டிற்கு அடுத்ததாக இரண்டாம் இடத்தினைப் பெற்றார்.
20 வயதுக்குட்பட்டோருக்கான உலகப் போட்டியில் இந்தியாவிற்குக் கிடைத்த மூன்றாவது பதக்கம் இதுவாகும்.
4 x 400 மீ கலப்பு நிலைமாற்று அணி ஓட்டப் பந்தயத்தில் வெள்ளிப் பதக்கத்தினையும் மகளிருக்கான 400 மீ. ஓட்டப் பந்தயத்தில் ரூபல் சவுத்ரி வெண்கலப் பதக்கத்தினையும் வென்றார்.