TNPSC Thervupettagam

20 அம்சத் திட்டத்தின் முன்னேற்றம் குறித்த அறிக்கை

February 5 , 2023 893 days 403 0
  • தேசியப் புள்ளியியல் அலுவலகமானது 20 அம்சத் திட்டத்தின் முன்னேற்றம் குறித்த அறிக்கையினை வெளியிட்டுள்ளது.
  • சமீப காலமாக இத்திட்டத்தின் செயல்திறன் மோசமாக உள்ளது.
  • இந்த அறிக்கையின்படி, 2022-23 ஆம் ஆண்டில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கில் 41% மட்டுமே நிறைவு செய்யப் பட்டுள்ளது.
  • அனைத்துத் திட்டங்களிலும் இந்தத் திட்டத்தின் செயல்திறன் மோசமாக இருந்ததாக தேசியப் புள்ளியியல் அலுவலகமானது கூறுகிறது.
  • 20 அம்சத் திட்டமானது 2016 ஆம் ஆண்டில் அதன் இலக்கில் 96% மட்டுமே நிறைவு செய்தது.
  • 2019 ஆம் ஆண்டில், இந்தத் திட்டம் அதன் இலக்கில் 13% மட்டுமே நிறைவு செய்தது.
  • இந்திய அரசானது, 1975 ஆம் ஆண்டில் 20 அம்சத் திட்டத்தை அறிமுகப்படுத்தியது.
  • இத்திட்டமானது தொடங்கப்பட்டதிலிருந்து 1982 ஆம் ஆண்டில் ஒரு முறையும் 1986 ஆம் ஆண்டில் ஒருமுறையும் என இரண்டு முறை திருத்தப்பட்டது.
  • ஆகவே 20 அம்சங்களைப் பயன்படுத்தி வறுமையை ஒழித்துக் கிராமப்புற மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
  • 2022-23 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கைத் தாக்கலின் போது, மத்திய அரசு இந்தத் திட்டத்திற்கான நிதி ஒதுக்கீட்டினை 36% அதிகரித்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்