2030 ஆம் ஆண்டில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை விட ஐந்து ஆண்டுகளுக்கு மிகவும் முன்னதாகவே, 2025 ஆம் ஆண்டில் இந்தியா பெட்ரோலில் 20% எத்தனால் கலப்பு என்ற இலக்கினை எட்டியுள்ளது.
2014 ஆம் ஆண்டில் 1.5% ஆக நிர்ணயிக்கப்பட்ட எத்தனால் கலப்பு இலக்கானது 2025 ஆம் ஆண்டில் 20% ஆக உயர்ந்தது என்பதோடு இது 11 ஆண்டுகளில் சுமார் 13 மடங்கு வளர்ச்சியைக் காட்டுகிறது.
2014 ஆம் ஆண்டில் 38 கோடி லிட்டராக இருந்த எத்தனால் உற்பத்தியானது 2025 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் 661.1 கோடி லிட்டராக அதிகரித்துள்ளது.
கச்சா எண்ணெய் இறக்குமதியைக் குறைப்பதன் மூலம் சுமார் 1.36 லட்சம் கோடி ரூபாய் அந்நியச் செலாவணி சேமிக்கப்பட்டது.
உயிரி எரிபொருள் துறையை ஆதரிப்பதன் மூலம் சுத்திகரிப்பு மையங்களுக்கு 1.96 லட்சம் கோடி ரூபாய் செலுத்தப்பட்டது.
விவசாயிகளுக்கு 1.18 லட்சம் கோடி ரூபாய்கள் வழங்கப்பட்டதன் மூலம் கிராமப்புற வருமானம் மற்றும் வேளாண்மையின் நிலைத்தன்மையை வலுப்படுத்தியது.
சுற்றுச்சூழல் நன்மைகளில் 698 லட்சம் டன் கார்பன் டை ஆக்சைடு உமிழ்வினைக் குறைத்தல், தேசியப் பருவநிலை உறுதிமொழிகளுக்கு உதவுதல் ஆகியவை அடங்கும்.
எத்தனால் முதன்மையாக கரும்பு மற்றும் கரும்பஞ்சாற்றுக் கசடு பெறப்படுவதால், இத்திட்டத்தினை நேரடியாக இந்திய வேளாண் பொருளாதாரத்துடன் இணைக்கிறது.