20வது இந்தியா - ரஷ்யா வருடாந்திர உச்சி மாநாடு: சென்னை- விளாடிவோஸ்டாக் பயணப் பாதை
September 5 , 2019 2162 days 625 0
20வது இந்தியா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளுக்கிடையேயான வருடாந்திர உச்சி மாநாடானது விளாடிவோஸ்டோக்கில் நடத்தப்பட்டது. பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக 5வது கிழக்குப் பொருளாதார மன்றத்தில் பங்கேற்றார்.
ரஷ்யாவின் தூரக் கிழக்கு பிராந்தியத்திற்குப் பயணம் செய்த முதல் இந்தியப் பிரதமர் என்ற பெருமையை மோடி பெற்றார்.
இந்த மாநாட்டில் 2025 ஆம் ஆண்டிற்குள் இருதரப்பு வர்த்தகத்தை 30 பில்லியன் டாலராக உயர்த்துவதற்கான திட்டங்கள் குறித்து அறிவிக்கப்பட்டன.
சென்னை மற்றும் விளாடிவோஸ்டாக் ஆகிய நகரங்களுக்கிடையே ஒரு முழுமையான கடல் வழியைக் கொண்டிருப்பதற்கான நோக்கம் சார்ந்த ஒப்பந்தம் ஒன்று இந்த மாநாட்டில் கையெழுத்திடப்பட்டது.
“தேசிய நாணயங்களில் பணவழங்கீடுகளை" மேற்கொள்வதற்கான பரஸ்பரத் தீர்வுகளை ஊக்குவிக்கும் பணி தொடரும் என்று இரு நாடுகளும் ஒப்புக் கொண்டன.