TNPSC Thervupettagam

2,000 ஆண்டுகள் பழமையான இந்தியத் தங்க மோதிரங்கள் கண்டெடுப்பு

July 11 , 2026 4 days 96 0
  • தாய்லாந்தின் பெட்சாபுரி மாகாணத்தில் உள்ள டான் யாய் தோங் (Don Yai Thong) தொல்பொருள் அகழ்வாராய்ச்சி தளத்தில் 2,000 ஆண்டுகள் பழமையான இரண்டு இந்தியத் தங்க மோதிரங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
  • ஒரு தங்க மோதிரத்தில் "புஸ்யாவால் பாதுகாக்கப்பட்டவர்" என்று பொருள்படும் "புசராகிதாசா" (pusarakhitasa) என்ற பண்டைய பிராமி எழுத்துப் பொறிப்பு உள்ளது, அதே சமயம் மற்றொரு மோதிரம் எவ்விதப் பொறிப்புமின்றி எளிமையாக உள்ளது.
  • இரும்புக்காலத்தைச் சேர்ந்த மனித எலும்புக்கூடுகளின் எச்சங்களுடன் இந்த மோதிரங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதுடன் இது ஆரம்பகால அடக்க முறைகளைக் குறிக்கிறது.
  • இந்தக் கண்டுபிடிப்பானது இந்தியா மற்றும் தென்கிழக்கு ஆசியாவிற்கு இடையிலான ஆரம்பகால கடல்சார் வர்த்தகம் மற்றும் கலாச்சார இணைப்புகளுக்கான சான்றுகளை வழங்குகிறது.
  • பிராமி என்பது இந்தியத் துணைக்கண்டத்தின் ஆரம்பகால எழுத்து முறைகளில் ஒன்றாகும் என்பதோடு மேலும் புஸ்யா (பூசம்) என்பது இந்திய வானியலில் உள்ள 27 நட்சத்திரங்களில் ஒன்றாகும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்