இந்திய ரிசர்வ் வங்கியானது (RBI) 2000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெற முடிவு செய்துள்ளது.
2000 ரூபாய் தாள்கள் தான் இந்தியாவில் புழக்கத்தில் உள்ள அதிக மதிப்புக் கொண்ட பணத் தாள் ஆகும்.
2000 மதிப்புள்ள ரூபாய் தாள்கள் 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் 1934 ஆம் ஆண்டு இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டத்தின் 24(1) வது பிரிவின் கீழ் அறிமுகப் படுத்தப்பட்டது.
2018-19 ஆம் ஆண்டில் 2000 ரூபாய் தாள்களை அச்சிடுவதை இந்திய ரிசர்வ் வங்கி நிறுத்தியது.
2023 ஆம் ஆண்டு மே 12 ஆம் தேதியன்றைய நிலவரப்படி, புழக்கத்தில் உள்ள நிலுவைத் தொகை 34,88,610 கோடி ரூபாயாக இருந்தது.
எனினும், 2000 மதிப்பிலான ரூபாய் தாள்கள் அதிகாரப்பூர்வமாக தொடர்ந்து செப்டம்பர் 30 தேதி வரை செல்லுபடி ஆகும்.