TNPSC Thervupettagam

200,000 ஆண்டுகள் பழமையான குதிரை டி.என்.ஏ

March 8 , 2026 3 days 61 0
  • ஜெர்மனியின் கீழ் சாக்சனி பகுதியில் உள்ள ஷோனிங்கன் தொல்பொருள் தளத்தில் 200,000 ஆண்டுகள் பழமையான குதிரை டிஎன்ஏ-வை அறிவியலாளர்கள் கண்டறிந்து உள்ளனர்.
  • இந்த டிஎன்ஏ, மத்திய பிளீஸ்டோசீன் சகாப்தத்தைச் சேர்ந்த, தற்போது அழிந்து போன குதிரை இனமான 'ஈக்வஸ் மோஸ்பாச்சென்சிஸ்' (Equus mosbachensis) என்பதற்குரியது என அடையாளம் காணப்பட்டுள்ளது.
  • ஷோனிங்கன் தளம், உலகிலேயே அறியப்பட்ட பழமையான வேட்டை ஆயுதங்களில் சிலவான 300,000 ஆண்டுகள் பழமையான மர வேட்டை ஈட்டிகளுக்கும் புகழ் பெற்றது.
  • இவ்வளவு பழமையான டிஎன்ஏக்கள், பனி உறைந்த பகுதிகள் மற்றும் உறைந்த பகுதிகளில் மட்டுமே சிதையாமல் இருக்க முடியும் என்று அறிவியலாளர்கள் இதற்கு முன்பு நம்பினர்.
  • அங்குள்ள வண்டல் மண்ணில் ஆக்சிஜன் குறைவாக இருந்ததாலும் (காற்றில்லா நிலை) மற்றும் கார்பனேட் தாதுக்கள் நிறைந்திருந்ததாலும், மரபணுப் பொருட்களின் சிதைவு வேகம் குறைக்கப்பட்டு, இந்த டிஎன்ஏ இத்தனை ஆண்டுகள் பாதுகாப்பாக இருந்துள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்