ஜெர்மனியின் கீழ் சாக்சனி பகுதியில் உள்ள ஷோனிங்கன் தொல்பொருள் தளத்தில் 200,000 ஆண்டுகள் பழமையான குதிரை டிஎன்ஏ-வை அறிவியலாளர்கள் கண்டறிந்து உள்ளனர்.
இந்த டிஎன்ஏ, மத்திய பிளீஸ்டோசீன் சகாப்தத்தைச் சேர்ந்த, தற்போது அழிந்து போன குதிரை இனமான 'ஈக்வஸ் மோஸ்பாச்சென்சிஸ்' (Equus mosbachensis) என்பதற்குரியது என அடையாளம் காணப்பட்டுள்ளது.
ஷோனிங்கன் தளம், உலகிலேயே அறியப்பட்ட பழமையான வேட்டை ஆயுதங்களில் சிலவான 300,000 ஆண்டுகள் பழமையான மர வேட்டை ஈட்டிகளுக்கும் புகழ் பெற்றது.
இவ்வளவு பழமையான டிஎன்ஏக்கள், பனி உறைந்த பகுதிகள் மற்றும் உறைந்த பகுதிகளில் மட்டுமே சிதையாமல் இருக்க முடியும் என்று அறிவியலாளர்கள் இதற்கு முன்பு நம்பினர்.
அங்குள்ள வண்டல் மண்ணில் ஆக்சிஜன் குறைவாக இருந்ததாலும் (காற்றில்லா நிலை) மற்றும் கார்பனேட் தாதுக்கள் நிறைந்திருந்ததாலும், மரபணுப் பொருட்களின் சிதைவு வேகம் குறைக்கப்பட்டு, இந்த டிஎன்ஏ இத்தனை ஆண்டுகள் பாதுகாப்பாக இருந்துள்ளது.