FRBM சட்டம் - 2003 கீழ் நிதி நிலைத்தன்மை முன்னேற்றம்
August 26 , 2025 139 days 181 0
தலைமைக் கணக்காளர் மற்றும் தணிக்கையாளரின் (CAG), நிதியியல் பொறுப்பு மற்றும் நிதி ஒதுக்கீட்டு மேலாண்மை (FRBM) சட்டத்தின் 2023–24 ஆம் ஆண்டு மதிப்பாய்வு ஆனது, இந்தியா நீண்டகாலப் பெரும் பொருளாதார நிலைத்தன்மையை நோக்கி முன்னேறி வருவதைக் காட்டுகிறது.
மத்திய அரசின் கடன் ஆனது 2024 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 57% ஆகக் குறைந்துள்ளது என்பதோடு இது 2020–21 ஆம் நிதி ஆண்டில் (FY) 61.38% ஆக இருந்தது.
2022 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 83% ஆக இருந்த பொது அரசுக் கடன் (GGD) 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் 81.3% ஆக சற்று குறைந்து உள்ளதோடு, இது 60% இலக்கை விட அதிகமாகும்.
கடன் நிலைத்தன்மைப் பகுப்பாய்வு (DSA), நிலையான அல்லது வீழ்ச்சியடைந்து வரும் கடன்-மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதத்தை நிலையான நிதிக் கொள்கையின் ஒரு அடையாளமாகக் கருதுகிறது.
2023–24 ஆம் நிதியாண்டின் இறுதியில் 31.11 லட்சம் கோடியாக இருந்த இது 2022–23 நிதியாண்டு முதல் 9.81 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.