TNPSC Thervupettagam

FRBM சட்டம் - 2003 கீழ் நிதி நிலைத்தன்மை முன்னேற்றம்

August 26 , 2025 3 days 41 0
  • தலைமைக் கணக்காளர் மற்றும் தணிக்கையாளரின் (CAG), நிதியியல் பொறுப்பு மற்றும் நிதி ஒதுக்கீட்டு மேலாண்மை (FRBM) சட்டத்தின் 2023–24 ஆம் ஆண்டு மதிப்பாய்வு ஆனது, இந்தியா நீண்டகாலப் பெரும் பொருளாதார நிலைத்தன்மையை நோக்கி முன்னேறி வருவதைக் காட்டுகிறது.
  • மத்திய அரசின் கடன் ஆனது 2024 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 57% ஆகக் குறைந்துள்ளது என்பதோடு இது 2020–21 ஆம் நிதி ஆண்டில் (FY) 61.38% ஆக இருந்தது.
  • 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 83% ஆக இருந்த பொது அரசுக் கடன் (GGD) 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் 81.3% ஆக சற்று குறைந்து உள்ளதோடு, இது 60% இலக்கை விட அதிகமாகும்.
  • கடன் நிலைத்தன்மைப் பகுப்பாய்வு (DSA), நிலையான அல்லது வீழ்ச்சியடைந்து வரும் கடன்-மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதத்தை நிலையான நிதிக் கொள்கையின் ஒரு அடையாளமாகக் கருதுகிறது.
  • 2023–24 ஆம் நிதியாண்டின் இறுதியில் 31.11 லட்சம் கோடியாக இருந்த இது 2022–23 நிதியாண்டு முதல் 9.81 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்