TNPSC Thervupettagam

2007 ஆம் ஆண்டின் மூத்தக் குடிமக்கள் சட்டம் குறித்த உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு 2025

April 9 , 2025 22 days 75 0
  • மூத்த குடிமக்கள் / முதியோர்கள் சட்டம் ஆனது, "தமக்குச் சொந்தமான ஊதியம் அல்லது தனக்கு என்று சொந்தமான ஒரு சொத்திலிருந்து" தங்களைப் பராமரிக்க முடியாதப் பெற்றோர்கள், தங்கள் குழந்தைகள் அல்லது உறவினர்கள் (சட்டப்பூர்வ வாரிசுகள்) மீது பராமரிப்பு வழக்குத் தொடர அனுமதிக்கிறது.
  • "பெற்றோர்கள் ஒரு இயல்பு வாழ்க்கையை நடத்தக் கூடிய வகையில்" பெற்றோரின் தேவைகளைப் பூர்த்தி செய்வதை அவர்களின் குழந்தைகள் அல்லது உறவினர்களின் ஒரு கடமையாக இச்சட்டம் நிர்ணயிக்கிறது.
  • இந்த வழக்குகளை விசாரிக்க என பிரத்தியேக தீர்ப்பாயங்களுடன், பிறப்பிக்கப்பட்ட எந்தவொரு உத்தரவுகளுக்கும் எதிரான மேல்முறையீடுகளை உடன் விசாரிக்க மேல் முறையீட்டு தீர்ப்பாயங்களையும் இந்தச் சட்டம் நிறுவுகிறது.
  • ஆனால் பராமரிப்பு வழங்கப்படாததற்காக அந்த முதியோர்கள் இந்தத் தீர்ப்பாயத்தை அணுகினால், அந்தச் சொத்தைப் பரிமாற்றம் அல்லது பரிசளித்தவை தொடர்பானப் பதிவு செல்லாது என்று அறிவிக்கப்படும்.
  • இந்தச் சட்டம் ஆனது பெற்றோருக்குத் தங்கள் குழந்தைகளையோ அல்லது தங்கள் உறவினர்களையோ தங்கள் வீட்டிலிருந்து வெளியேற்றச் செய்யும் ஒரு உரிமையை மிக வெளிப்படையாக வழங்கவில்லை என்றாலும், சில சூழ்நிலைகளில் அத்தகைய வெளியேற்ற உத்தரவுகளை அனுமதிக்கும் வகையில் அச்சொத்துப் பரிமாற்றங்கள் தொடர்பான விதியை உச்ச நீதிமன்றம் விளக்கிக் கூறியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்