2011 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பை அடிப்படையாகக் கொண்ட இடப்பெயர்வுத் தரவு
July 27 , 2019 2117 days 710 0
கடந்த வாரத்தில் வெளியிடப்பட்ட 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பை அடிப்படையாகக் கொண்ட இடப்பெயர்வுத் தரவின்படி, திருமணம் மற்றும் வேலைவாய்ப்பு ஆகியவை இடப்பெயர்வுக்கு முக்கியக் காரணங்களாகும்.
ஒரு நபர் அவன்/அவள் பிறந்த இடத்தை விட்டு வேறு இடத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பில் கணக்கிடப்படும்போது, அவன்/அவள் ஒரு “இடப்பெயர்வாளராக” (புலம் பெயர்ந்தவர்) கருதப்படுகின்றார்.
2011 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் ஏறத்தாழ 45.58 கோடி இந்தியர்கள் “இடம்பெயர்ந்தவர்களாக” கண்டறியப்பட்டுள்ளனர்.
ஏறத்தாழ 39.57 கோடி மக்கள் தங்களது மாநிலத்திற்குள்ளேயே இடம் பெயர்ந்துள்ளனர்.
ஏறத்தாழ 5.43 கோடி மக்கள் தங்களது சொந்த மாநிலத்திலிருந்து வேறு மாநிலத்திற்கு இடம் பெயர்ந்துள்ளனர்.