2014 ஆம் ஆண்டிற்கு முந்தைய ஊழல் வழக்குகளில் காப்பு
September 20 , 2023 721 days 374 0
டெல்லி சிறப்புக் காவல் ஸ்தாபனச் சட்டத்தின் 6A வது பிரிவினை ரத்து செய்த 2014 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பானது அதற்குப் பின்னோக்கியத் தேதிகளிலும் பயன்படுத்தப் படும் என்று உச்ச நீதிமன்றம் கூறியது.
இந்தச் சட்டத்தின் 6A வது பிரிவானது 2003 ஆம் ஆண்டில் இந்தச் சட்டத்தில் அறிமுகப் படுத்தப் பட்டது.
இணைச் செயலாளர் மற்றும் அதற்கு மேலான உயர் பதவியில் உள்ள அதிகாரிகளுக்கு எதிரான ஊழல் வழக்குகளில் மத்தியப் புலனாய்வுத் துறை விசாரணை நடத்துவதற்கு முன் மத்திய அரசின் ஒரு அனுமதியினை கட்டாயம் பெற வேண்டும் என்று இப்பிரிவு கூறுகிறது.
6Aவது பிரிவு அடிப்படை உரிமைகளை மீறுவதாகவும், ஒரு சட்டம் அரசியலமைப்புக்கு முரணானதாக அறிவிக்கப்பட்டால், அது அதன் தொடக்கத்தில் இருந்தே செல்லாது என்றும் நீதிமன்றம் கூறியது.