2015 முதல் 2022 ஆம் ஆண்டு வரை பதிவான மலேரியா பாதிப்புகள்
April 30 , 2023 831 days 347 0
இந்தியாவில் 2015 முதல் 2022 ஆம் ஆண்டு வரையிலான காலக் கட்டத்தின் போது, மலேரியா பாதிப்புகளில் 85.1 சதவீதம் சரிவும் மற்றும் மலேரியா நோயால் ஏற்படும் இறப்புகளில் 83.36 சதவீதம் சரிவும் ஏற்பட்டுள்ளது.
தென்கிழக்கு ஆசிய பிராந்தியத்தில் அதிக நோய்ப் பாதிப்பு சுமை, அதிகளவு பாதிக்கப் பட்ட ஒரே நாடாக இந்தியா இருந்தது.
2015 ஆம் ஆண்டு நடைபெற்ற கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டில் ஆசிய-பசிபிக் பிராந்திய தலைவர்கள் கூட்டணியின் மலேரியா ஒழிப்பிற்கான ஒரு செயல் திட்டத்திற்கு இந்தியா ஒப்புதல் அளித்தது.
இது 2030 ஆம் ஆண்டிற்குள் மலேரியா அற்ற நாடாக மாறும் ஒரு முயற்சியினை மேற் கொள்வதற்கான ஊக்கத்தினை இந்தியாவிற்கு அளித்தது.